OTT Update: பைசன், டியூட், டீசல் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? அந்த படத்துக்கு மட்டும் என்ன தனி சலுகை?

சென்னை தமிழ் சினிமாவில் முன்னரெல்லாம் ஒரு பெரிய நடிகரின் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்றால், படம் வேலைகள் நடந்து கொண்டு இருக்கும்போது, தீபவளிக்கோ, பொங்கலுக்கோ இரண்டு மாதங்களோ, ஒரு மாதமோ இருக்கிறது என்றால், நாம் ஏன் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது? பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணலாமே என்ற எண்ணத்தை உடனே தீர்க்கமான முடிவாக மாற்றிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு ஓடிடி என்ற மிகப்பெரிய சந்தை வந்த பின்னர், பெரிய நடிகர்களின் படங்களோ, வளரும் நடிகரின் படங்களோ,எல்லோருக்கும் ஒரே ஃபார்முலாதான் அது, " எல்லாரும் வரிசையில் வாங்க பாஸ்" என்பதுதான் அது.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் படங்களான பைசன், டியூட் மற்றும் டீசல் என மொத்தம் மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. மூன்று படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மூன்று படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படி இருக்கும்போது இந்த படங்கள் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பது குறித்தும் ஓடிடி பிரியர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த செய்தித் தொகுப்பு.

2025 Diwali Release Movies Bison Dude Diesel OTT Release Date Updates

பைசன்: தீபாவளியை முன்னிட்டு இன்று அதாவது அக்டோபர் 17ஆம் தேதி மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த மூன்று படங்களின் கதாநாயகர்களையும் தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகர்கள் என்று வகைப்படுத்தலாம். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் பைசன் படம் தான், அவருக்கு மூன்றாவது படம். இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, லால், அமீர் என பலரும் நடித்துள்ளார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்த படம் ஓடிடி தளத்தில், நவம்பர் 14 அல்லது 21 ஆம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

டியூட்: அதேப்போல் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரீ மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைக்கிறார் சாய் அபயங்கர். படத்தில் சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் கமர்ஷியலாக வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் ஓடிடி உரிமத்தையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது. இந்த படமும் நவம்பர் 14ஆம் தேதி அல்லது 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது.

2025 Diwali Release Movies Bison Dude Diesel OTT Release Date Updates

டீசல்: அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கி, ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள படம் டீசல். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் என்னவென்றால் இந்த படத்தின் ஓடிடி உரிமம் இதுவரை எந்த ஓடிடி நிறுவனம் வாங்கியது என்று படக்குழு தரப்பில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை படத்தின் தியேட்டரிக்கல் ரிலீஸ்க்குப் பின்னர் ஓடிடி உரிமம் விற்பனை செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கலாம். எனவே இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தப் படாமல் உள்ளது. இது மட்டும் இல்லாமல், டியூட் மற்றும் பைசன் படங்கள் தியேட்டரில் சுமார் 4 வாரங்களைக் கடந்தும் நன்றாக வசூலைக் குவித்தால் இதன் ஓடிடி ரிலீஸ் தேதிகளும் மாறுபடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X