ஓடிடியில் ரிலீசாகும் சமுத்திரக்கனியின் படம்... முதல் பார்வையை வெளியிட்ட தனுஷ்
சென்னை : நடிகர் சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் சித்திரை செவ்வானம்.
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
இந்தப் படம் வரும் டிசம்பர் 3ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் முதல் பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சமுத்திரக்கனி
நடிகர் சமுத்திரக்கனி தேர்ந்தெடுத்த கதைகளில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விநோதய சித்தம் பரவலாக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து உடன்பிறப்பே படத்திலும் நடித்து பெயர் பெற்றார்.

சித்திரைச் செவ்வானம் படம்
இந்நிலையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் சித்திரை செவ்வானம். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சில்வா. இந்தப் படத்தின் கதையை இயக்குநர் விஜய் எழுதியுள்ளது மேலும் கவனத்தை பெற்றுள்ளது.

சாய் பல்லவி தங்கை அறிமுகம்
படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரீமா கல்லிங்கல், இயக்குநர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அப்பா -மகள் பாசத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஓடிடியில் ரிலீஸ்
பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் 3ம் தேதி படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ஜி5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முதல் பார்வை போஸ்டர்
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நேற்றைய தினம் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சில்வாவிற்கு இந்தப் படம் சிறப்பான வெற்றியை கொடுக்கவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

அப்பா -மகள் உறவு
இந்த போஸ்டரில் தன்னுடைய இளவயது மகளை சைக்கிளில் ஓட்டி செல்லும் தந்தையாக சமுத்திரக்கனி காணப்படுகிறார். இதையடுத்து தனுஷிற்கு சில்வா மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ள நிலையில் இசையமைத்துள்ளார் சாம் சிஎஸ்.


Click it and Unblock the Notifications











