சினிமாவில் இருந்த மாஃபியாவை இந்த கொரோனா வைரஸ் லாக்டவுன் காலி செய்து விட்டது.. பிரகாஷ் ராஜ் பளிச்!
சென்னை: திருச்சிற்றம்பலம், சீதா ராமம், விருமன், பொன்னியின் செல்வன் என இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள தளபதி விஜய்யின் வாரிசு படத்திலும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கப்ஸா, சகுந்தலம் உள்ளிட்ட பெரிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரகாஷ் ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் இருந்த மாஃபியாவை இந்த லாக்டவுன் காலி செய்து விட்டது என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுந்தர சோழர்
ராதே ஷ்யாம் படத்தில் ராணுவ அதிகாரியாகவும், விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவின் அப்பாவாகவும் நடித்திருந்த பிரகாஷ் ராஜ், 500 கோடி வசூல் ஈட்டிய பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழராக நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரை சுற்றியே அந்த கதை நகரும் என்பது குறிப்பிடத்தக்கது. 2ம் பாகத்தில் ஊமை ராணிக்கும் சுந்தர சோழருக்கும் என்ன உறவு என்பது புரிய வரும்.

மீண்டும் விஜய்யுடன்
கில்லி, வில்லு உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரகாஷ் ராஜ் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் வாரிசு படத்தில் பிரகாஷ் ராஜ் தான் வில்லனா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

புதிய வெப்சீரிஸ்
பாவக் கதைகள், நவரசா உள்ளிட்ட சில ஓடிடி படைப்புகளில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் நடிப்பில் புதிதாக ஒரு இந்தி வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. முக்பீர் எனும் டைட்டிலில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸ் ஜி5 ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 11ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இந்த வெப்சீரிஸின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ராஸி கதை இல்லை
இந்த வெப்சீரிஸ் ஒரு ஸ்பை பற்றிய கதை என்பதால் ராஸி படம் போலவே இருப்பதாக டிரைலரை பார்த்த ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில், இரண்டும்வ் வேறு வேறு கதைகள் எனக் கூறிய பிரகாஷ் ராஜ், சினிமாவில் இருந்து மாஃபியா முற்றிலுமாக ஒழிய இந்த பேண்டமிக் உதவியது என லாக்டவுன் பற்றி பேசி உள்ளார்.

மாஃபியா ஒழிந்தது
ஒரு படைப்பை உருவாக்கினால் அது தியேட்டரில் தான் வெளியாக வேண்டும், இரண்டரை மணி நேரம் தான் இருக்க வேண்டும், டிவியில் வெளியிடக் கூடாது என நதி போல ஓடிக் கொண்டிருந்த சினிமாவை சிலர் சுயநலத்துக்காக மாஃபியா போல தடுத்து நிறுத்தி தாங்கள் மட்டுமே சம்பாதித்துக் கொண்டு இருந்தனர்.

கொரோனா லாக்டவுன்
ஆனால், இந்த கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்ட லாக்டவுன் காரணமாக அந்த மாஃபியா எல்லாம் ஒழிந்து விட்டது. இப்போ ஓடிடி மூலம் நிறைய சின்ன சின்ன படங்கள் வெளியாகிறது. இயக்குநர்களால் பெரிய கதைகளை உருவாக்க முடிகிறது. எந்தவொரு தடையும் இல்லை. நல்ல கதைகள், நல்ல படங்களுக்கு ஓடிடியில் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











