அந்த தயாரிப்பாளர் என்னை விடாம டார்ச்சர் பண்ணாரு.. பாலியல் புகார் கொடுத்த பிரபல டிவி நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல அமெரிக்க டிவி நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் The Crazy Rich Asians வெப்சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் நடிகை கான்ஸ்டான்ஸ் வூ (Constance Wu).

Fresh Off the Boat டிவி தொடரில் நடித்த போது அந்த தொடரின் தயாரிப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சினிமாவில் நடித்து வரும் நடிகைகளுக்கு பல விதங்களில் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்ட வருவதாக ஏகப்பட்ட புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. மீ டூ இயக்கத்தின் மூலம் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சிறைக்கு சென்றதும் பாலியல் புகார்கள் காரணமாகத்தான்.

தயாரிப்பாளர்களின் கெட்ட அணுகுமுறை

தயாரிப்பாளர்களின் கெட்ட அணுகுமுறை

பல கோடி போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நாயகர்களுடன் நடிகைகள் நெருக்கமாக நடிப்பதை பார்த்து பொறாமை கொண்டே நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்தை கொண்டு வருவதாக ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் மீது உலகளவில் புகார்கள் எழுந்து வருகின்றன. பட வாய்ப்புகளை கொடுக்கவே அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்றும் படத்திற்கு தேர்வு செய்ய காஸ்டிங் கோச் நடக்கிறது என்றும் தொடர் புகார்கள் குவிந்த வண்ணமே உள்ளன.

தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

இந்நிலையில், பிரபல அமெரிக்க டிவி நடிகை கான்ஸ்டான்ஸ் வூ தற்போது தான் நடித்த Fresh Off the Boat டிவி தொடரின் தயாரிப்பாளர் மீது அதிரடியாக பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு அந்த டிவி தொடரில் தான் அறிமுகம் ஆனதில் இருந்தே அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்றும், சக நடிகர்களுக்கு அது பற்றி தெரிந்தும் கண்டுக்கொள்ளாமல் சென்றனர் என்றும் பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

முதலில் பயந்தேன்

முதலில் பயந்தேன்

வேலை போய் விடுமோ என்கிற பயம் மற்றும் இண்டஸ்ட்ரியில் இருந்தே என்னை அவர் தூக்கிவிடுவேன் என்றும் மிரட்டினார் எனக் கூறியுள்ளார். ஆனால், இனியும் அந்த கேவலமான புத்தி கொண்ட தயாரிப்பாளரின் செயலை அம்பலப்படுத்தாமல் வாய் மூடி இருக்க மாட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டியில் பொங்கி எழுந்துள்ளார். மேலும், அந்த தயாரிப்பாளர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஓடிடி பிரபலம்

ஓடிடி பிரபலம்

அந்த டிவி தொடரில் இருந்து வெளியேறிய அந்த நடிகை அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸான The Crazy Rich Asians தொடரில் நடித்து சர்வதேச அளவில் புகழ் அடைந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு இப்படியொரு பாலியல் தொல்லை தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்ததை அறிந்த ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகி உள்ளனர். அந்த தயாரிப்பாளரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X