83 படத்திற்கு க்ரீன் சிக்னல் தந்த மும்பை ஐகோர்ட்...ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஓடிடி
மும்பை : ரன்வீர் கபூர், தீபிகா படுகோன், ஜீவா உள்ளிட்டோர் நடித்து தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சமீபத்தில் ரிலீசானது 83 படம். 1983 ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாக கொண்டு இந்த படம் படம் எடுக்கப்பட்டுள்ளது.
83 படம் 2021 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற தவறி விட்டது. கொரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த சமயம் என்பதால் தியேட்டர்களுக்கு வர மக்கள் தயக்கம் காட்டினர். இதுவே 83 படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாமல் போனதற்கு காரணமாக அமைந்தது.

காத்திருந்த ரசிகர்கள்
ஆனால் இந்த படம் எப்போது ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனங்கள் 83 படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. இதனால் விரைவில் ஓடிடி.,யில் 83 படம் ரிலீசாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஓடிடி.,க்கு தடை கேட்டு வழக்கு
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நெட்ஃபிளிக்ஸ், ஸ்டார் இந்தியா ஆகிய நிறுவனங்கள் காப்பி ரைட் உரிம ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும், இதனால் 83 படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என கேட்டு 83 படத்தை தயாரித்த Mad Man நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அசத்தல் தீர்ப்பு வழங்கிய கோர்ட்
இந்த வழக்கை நேற்று விசாரித்த மும்பை ஐகோர்ட், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளில் 83 படத்தை உட்படுத்த முடியாது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டு பல காலம் ஆகிறது. இந்த ஒப்பந்தம் காலாவதி ஆகி விட்டதாக கூறி Mad Man நிறுவனம் போட்ட வழக்கை தள்ளுபடி செய்ததுடன், 83 படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யவும் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.
Recommended Video

சர்ப்ரைசாக ரிலீசான 83 படம்
கோர்ட்டே தனது தீர்ப்பில் தெளிவாக கூறி விட்டதால் 83 படத்திற்கு இரந்த தடை நீங்கியது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் தளங்களில் 83 படம் அசத்தலாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 83 படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நள்ளிரவில் திடீரென படம் ரிலீஸ் செய்யப்பட்டது மிகப் பெரிய சர்ப்ரைசாக அமைந்தது. தியேட்டரில் பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











