என்னது...ஓடிடி ரிலீசுக்கு தயாராகிறதா ரஜினியின் அண்ணாத்த ?

சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது.

நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க கிராமத்து, பொழுபோக்கு படமாக அமைக்கப்பட்டுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கணேசன் ரோலில் ரஜினி

கணேசன் ரோலில் ரஜினி

டைரக்டர் சிறுத்தை சிவா, விநாயகர் பக்தன் என்பதால் இதுவரை தான் இயக்கிய படங்களின் ஹீரோ கேரக்டர்களுக்கு விநாயகர் தொடர்புடைய பெயர்களையே வைத்துள்ளார். அந்த வரிசையில் அண்ணாத்த படத்தில் கணேசன் என்ற கிராம தலைவர் கேரக்டரில் தான் ரஜினி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

பட்டையை கிளப்பிய பாடல்கள்

பட்டையை கிளப்பிய பாடல்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியன வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட், செகண்ட் மற்றும் மூன்றாவது சிங்கிள் ஆகியன ஒரு வார கால இடைவெளியில் வெளியிடப்பட்டது. இந்த மூன்று பாடல்களுமே ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

நாளை டிரைலர் ரிலீஸ்

நாளை டிரைலர் ரிலீஸ்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி கிராமத்து கெட்அப்பில், செம எனர்ஜிடிக், ஜாலி கேரக்டரில் நடித்துள்ளது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆட்டம் போட வைத்துள்ளது. அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்ய இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், படத்தின் டிரைலரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது.

டிரெண்டிங்கில் ரஜினி

டிரெண்டிங்கில் ரஜினி

நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனையடுத்து ட்விட்டரில் ரஜினிகாந்த் ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரமாக இந்த ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்த நிலையில், அண்ணாத்த டிரைலர் ரிலீஸ் அறிவிப்பால் மீண்டும் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது.

பிரம்மாண்ட ரிலீஸ்

பிரம்மாண்ட ரிலீஸ்

ரஜினிகாந்த், அண்ணாத்த டிரைலர் போன்ற ஹாஷ்டேக்குகளை உருவாக்கி, ரஜினி ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அண்ணாத்த படக்குழுவினரும் தங்கள் பங்கிற்கு படத்தை மிக பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். நவம்பர் 1 ம் தேதி முதல் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து விட்டதால், ரஜினி ரசிகர்களும், படக்குழுவினரும் செம குஷியாகி உள்ளனர்.

ஓடிடி.,யிலும் ரிலீசா

ஓடிடி.,யிலும் ரிலீசா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின் படி, தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 21 நாட்களில் அண்ணாத்த படத்தை நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சூப்பர் ஸ்டாரின் படமே ரிலீஸ் செய்யப்பட்ட 21 நாளில் ஓடிடி.,க்கு வர உள்ளதா என பலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X