அஜித்தின் துணிவு ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்… விரைவில் ரிலீஸ் அப்டேட்

சென்னை: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அவரது 61வது படத்தில் நடித்து வருகிறார்.

ஏகே 61 என்ற தலைப்பில் தொடங்கிய இந்தப் படத்தின் தலைப்பு 'துணிவு' என படக்குழு அறிவித்துள்ளது.

துணிவு ஷூட்டிங் பாங்காங்கில் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

துணிவாக வரும் அஜித்

துணிவாக வரும் அஜித்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்தது. 'ஏகே 61' என்ற டைட்டிலில் ஷூட்டிங் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் தலைப்பு, கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 'துணிவு' என்ற டைட்டிலும் அஜித்தின் இரண்டு போஸ்டர்களும் வெளியாகி செம்ம வைரலானது. அஜித் ஸ்டைலிஷாக கையில் மெஷின் கன்னுடன் இருக்கும் துணிவு போஸ்டர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகின. இந்நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் பாங்காங்க் சென்றுள்ளார்.

துணிவு பொங்கல் ரிலீஸ்?

துணிவு பொங்கல் ரிலீஸ்?

அஜித்தின் துணிவு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்தனர். விஜய் நடிப்பில் உருவாகும் 'வாரிசு' பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியானதால், விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே பெரிய கலவரமே வெடித்தது. இருதரப்பு யார் பெருச்சுன்னு அடிச்சுக் காட்டும் அளவிற்கு கோதாவில் இறங்கினர். ஆனால், அஜித்தின் துணிவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

துணிவு ஓடிடி உரிமை

துணிவு ஓடிடி உரிமை

இந்நிலையில், அஜித்தின் துணிவு படத்திற்கான ஓடிடி உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியுள்ளது,. அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான 'வலிமை' எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் மோசம் போகவில்லை. அதனால் துணிவு படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'துணிவு' படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அறிவிப்புகள் வெளியாகவில்லை.

ஜீ 5 ரைட்ஸ் என்ன ஆனது?

ஜீ 5 ரைட்ஸ் என்ன ஆனது?

அஜித்தின் துணிவு படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கனவே போனிகபூர் தயாரித்த 'நேர்கொண்ட பார்வை'. 'வலிமை' படங்களின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியிருந்தது. இந்நிலையில், ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அஜித்தின் துணிவு பட ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நெட்பிளிக்ஸ் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளதால், துணிவு ஓடிடி ரைட்ஸ் கை மாறியிருக்கலாம் என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X