சாதனைன்னா இப்படி இருக்கனும்...ஓடிடியிலும் மாஸ் காட்டும் வலிமை

சென்னை : அஜித்தின் வலிமை படம் தியேட்டர்களில் ரிலீசாகி வசூல் சாதனை படைத்த நிலையில், தற்போது ஓடிடி.,யிலும் தனது சாதனை கணக்கை துவக்கி உள்ளது. இதை பார்த்த மற்ற ஹீரோக்கள் அசந்து போய் உள்ளனர்.

அஜித் நடித்த ஆக்ஷன் த்ரில்லர் படமான வலிமை கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. விமர்சனங்கள் எதிர்ப்புக்களை சந்தித்தாலும் அதைத் தாண்டி இந்த படம் வசூல் சாதனை படைத்துள்ளது. ரிலீசான முதல் நாளிலேயே முந்தைய அத்தனை ஓப்பனிங் டே வசூல் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியது.

200 கோடி வசூல்

200 கோடி வசூல்

பிப்ரவரி 24 ம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட வலிமை படம் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முதல் வாரத்திலேயே வலிமை படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது.

ஓடிடி.,யில் சாதனை

ஓடிடி.,யில் சாதனை

தியேட்டரில் திரையிடப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், வலிமை படத்தை ஓடிடி.,யில் வெளியிட தடை விதிக்க முடியாது என கோர்ட்டும் தெரிவித்து விட்டதால் மார்ச் 25 ம் தேதி வலிமை படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஜீ5 தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஓடிடி.,யில் தற்போது வரை 100 மில்லியன் நிமிடங்களை கடந்து வலிமை சாதனை படைத்துள்ளது.

பெரிய படங்கள் பெரிய சாதனை

பெரிய படங்கள் பெரிய சாதனை

இதனை வலிமை பட தயாரிப்பு நிறுவனமான பே வ்யூ ப்ராஜக்ட்ஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளது. அதில், பெரிய படங்கள் பெரிய சாதனைகளை படைக்கும். ஜீ 5 தளத்தில் வலிமை 100 மில்லியன் Streaming நிமிடங்களை கடந்துள்ளது. தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான ட்ரீட் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏகே 61, ஏகே 62 எப்போ

ஏகே 61, ஏகே 62 எப்போ

வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரசிகர்களின் கவனம் தற்போது அஜித்தின் அடுத்தடுத்த படங்களான ஏகே 61 மற்றும் ஏகே 62 படங்கள் மீது திரும்ப துவங்கி உள்ளது. அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் மூன்றாவதாக ஏகே 61 உருவாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஏகே 62 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X