துணிவு VS வாரிசு... தியேட்டரில் மட்டுமில்ல ஓடிடியிலும் போட்டா போட்டி!

சென்னை : வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

அஜித்தின் துணிவு படத்தை பாப்பீங்களா? விஜய்யின் வாரிசு படத்தை பாப்பீங்களா என பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு, இணையமே கடந்த இரண்டு மாதமாக திணறடித்தது.

இதனால், இவ்விரு படங்களும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

துணிவா...வாரிசா

துணிவா...வாரிசா

அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 11ந் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ந் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் விஜய்யின் வாரிசு படமும் ஜனவரி 11ந் தேதி ஒரே நாளில் தியேட்டரில் வெளியானது.

துணிவா...வாரிசா

துணிவா...வாரிசா

அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 11ந் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ந் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் விஜய்யின் வாரிசு படமும் ஜனவரி 11ந் தேதி ஒரே நாளில் தியேட்டரில் வெளியானது.

எச் வினோத்தின் துணிவு

எச் வினோத்தின் துணிவு

எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் துணிவு படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.இத்திரைப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன் ஆகியோர் நடித்துள்ளனர். அஜித் இப்படத்தில் செம ஸ்டைல் லுக்குடன் சும்மா கெத்தாக பாட்டு, டான்ஸ் என ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல விருந்தாக அமைந்துள்ளது.

வாரிசு

வாரிசு

அதே போல வம்சி இயக்கிய வாரிசு திரைப்படமும் சக்கை போடு போட்டு வருகிறது. குடும்ப பின்னணி கொண்ட இந்த படத்தில் காதல் , ரொமான்ஸ், குடும்ப செண்டிமென்ட் என அனைத்திலும் விஜய் பட்டையை கிளப்பி உள்ளார். ராஷ்மிகா,பிரகாஷ் ராஜ், பிரபு,ஷியாம், குஷ்பு என பலர் நடித்த இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஓடிடியிலும் போட்டா போட்டி

ஓடிடியிலும் போட்டா போட்டி

இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரிசு படத்தை அமேசான் ஓடிடி தளமும், துணிவு படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளமும் வாங்கி உள்ள நிலையில் பிப்ரவரி 10ந் தேதி ஒரே நாளில் ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எழுந்துள்ள வசூல் சண்டையில், ஓடிடியில் எந்த படத்தை ரசிகர்கள் பார்த்தார்கள் என்ற சண்டையும் அடுத்தமாதம் ஆரம்பமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X