கார்த்தியின் விருமனை ஓரங்கட்டிய அமலா பாலின் கடாவர்.. செம ஹேப்பியில் அவரே போட்ட ட்வீட்டை பாருங்க!

சென்னை: அமலா பால் தயாரித்து நடித்துள்ள கடாவர் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியானது.

ஐஎம்டிபி ரேட்டிங்கில் கடாவர் திரைப்படத்திற்கு அதிக கவனம் கிடைத்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் அமலா பால்.

கடாவர் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சொந்த தயாரிப்பு

சொந்த தயாரிப்பு

இயக்குநர் ஏ.எல். விஜய் உடனான விவாகரத்து மற்றும் ஆடை படத்தில் நடித்த சர்ச்சைகளுக்கு பிறகு முன்பு இருந்ததை போல முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தை நடிகை அமலா பால் ஒரேயடியாக இழந்து விட்டார். இந்நிலையில், தனது சொந்த தயாரிப்பில் நல்ல கதையை தேர்வு செய்து நடித்து ஓடிடியில் கடாவர் படத்தை வெளியிட்டுள்ளார் அமலா பால்.

கடாவர் என்றால் என்ன

கடாவர் என்றால் என்ன

கடாவர் என்றாலே போஸ்ட்மார்ட்டத்திற்கு வரும் உடல்கள் தான் என படத்தின் கிளைமேக்ஸில் விளக்கம் தருகிறார் அமலா பால். பத்ரா எனும் கதாபாத்திரத்தில் பத்ரகாளியாகவே நடித்து மிரட்டி இருக்கிறார். முதல் ஷாட்டில் பிணவரையில் கூலாக சாப்பாடு சாப்பிடுவதில் ஆரம்பித்து கடைசி வரை தனது நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

என்ன கதை

என்ன கதை

ஏஞ்சல் ஜீஸஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதுல்யா ரவியை கொன்று அவரது இதயத்தை திருடி இன்னொருவருக்கு பொருத்தும் மோசடியை வெளிச்சப்படுத்தி அந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருக்கும் ஆட்களை சம்பவம் செய்வதை செம கிரைம் த்ரில்லராக கொண்டு சென்றுள்ளனர். உடற்கூறு ஆய்வாளராக நடித்துள்ள அமலா பால், இந்த வழக்கை எப்படி ஆய்வு செய்கிறார் என்பதும், கடைசியில் நடக்கும் ட்விஸ்ட்டும் தான் கடாவர் கதை.

விருமனை ஓரங்கட்டி

விருமனை ஓரங்கட்டி

ஐஎம்டிபி டாப் சார்ட்டில் 19.8% பேர் அமலா பாலின் கடாவர் படத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ் ராக்கர்ஸ், யானை மற்றும் அதற்கும் கீழாக விருமன் 4வது இடத்தில் இருக்கிறது. இந்த ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்து நடிகை அமலா பால் போட்டுள்ள ட்வீட் தற்போது டிரெண்டாகி வருகிறது.

தொடர்ந்து தயாரிப்பாரா

தொடர்ந்து தயாரிப்பாரா

கடாவர் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகை அமலா பால் தொடர்ந்து தனக்கான படங்களை தயாரித்து நடிப்பாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். மேலும், அமலா பால் முன்பை போலவே முன்னணி நடிகையாக டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றும் அவரது நடிப்பு அபாரமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X