அமேசான் ஒரிஜினல் வெப் சீரிஸில் இணைந்த சமந்தா... தள்ளிப்போகிறதா சாகுந்தலம் ரிலீஸ்?

மும்பை: சமந்தா நடிப்பில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியான யசோதா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இதனைத்தொடர்ந்து சமந்தாவின் சாகுந்தலம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் விஜய தேவரகொண்டாவுடன் நடித்த குஷி படத்தின் ஷூட்டிங்கும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சமந்தாவின் புதிய வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பை அமேசான் பிரைம் ஓடிடி அபிஸியலாக வெளியிட்டுள்ளது.

 சாகுந்தலம் ரிலீஸ் அப்டேட்

சாகுந்தலம் ரிலீஸ் அப்டேட்

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான யசோதா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 33 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. இதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்நிலையில், குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த சாகுந்தலம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்து பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது சாகுந்தலம் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 பாதியில் நின்ற குஷி

பாதியில் நின்ற குஷி

கடந்த வாரம் வெளியான ஷாருக்கானின் பதான் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பான் இந்தியா படமாக ரிலீஸான பதான் வெற்றியால், சாகுந்தலம் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வட மாநிலங்களில் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் சாகுந்தலம் ரிலீஸில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக தசை அழற்சி எனப்படும் மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா. குஷி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்யவில்லை. தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே, சமந்தா புதிய வெப் சீரிஸில் நடிக்க ரெடியாகிவிட்டாராம். இதனால் குஷி படக்குழுவும் குழப்பத்தில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 அமேசான் அபிஸியல் அப்டேட்

அமேசான் அபிஸியல் அப்டேட்

சமந்தா நடிக்கவுள்ள புதிய வெப் சீரிஸ் குறித்த செய்திகள் வெளியாகிவந்த நிலையில், தற்போது அபிஸியலாக அறிவித்துள்ளது அமேசான் ப்ரைம் நிறுவனம். தி பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர்கள் டிகே & ராஜ் கூட்டணியில் மீண்டும் சமந்தா நடிக்கும் இந்த வெப் சீரிஸ் தொடங்கியதாக அப்டேட் வெளியாகியுள்ளது. தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் சமந்தாவுக்கு மிகப் பெரிய கம்பேக் கிடைத்தது. அதனால் டிகே & ராஜ் இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸிலும் கமிட் ஆகியுள்ளார் அவர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அமேசான் பிரைம், சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய பதிப்பை தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளது.

 சிட்டாடல் இந்தியன் வெர்ஷன்

சிட்டாடல் இந்தியன் வெர்ஷன்

சிட்டாடல் வெப் சீரிஸ்ஸின் ஷூட்டிங் மும்பையில் தொடங்கிய நிலையில், சமந்தா அதில் கலந்துகொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவான் இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ஹாலிவுட்டில் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா லீட் ரோலில் நடிக்கின்றனர். அதே வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் வருண் தவான், சமந்தா இருவரும் நடிக்கின்றனர். இந்த வெப் சீரிஸ் சயின்ஸ் பிக்சன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அமேசான் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ் சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X