அம்பானி முதல் அட்லி வரை.. ஷாருக்கான் மகன் வெப்சீரிஸ் ப்ரீமியருக்கு குவிந்த கூட்டம்.. வாரிசுக்கு வாழ்க்கை!
மும்பை: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெப்சீரிஸ் ப்ரீமியர் நேற்று மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில், ஷாருக்கான், ஆலியா பட், விக்கி கவுஷல், ரன்பீர் கபூர் என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
மேலும், ஜியோ நிறுவனர் அம்பானி தனது குடும்பத்துடன் ப்ரீமியர் விழாவுக்கு வந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும், இயக்குநர் அட்லி செம ஸ்டைலாக தனது மனைவியுடன் ஷாருக்கான் மகன் வெப்சீரிஸ் ப்ரீமியரில் பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில், அல்லு அர்ஜுன் உடன் நெட்பிளிக்ஸ் தலைமை நிர்வாகிகளையும் அட்லி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் வழக்கில் கைது: பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷாவான ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடத்தியதாக கைது செய்யப்பட்டது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது மகன் மீது எந்தவொரு தவறும் கிடையாது என சட்டப்போராட்டம் நடத்தி ஷாருக்கான் மகனை ரிலிஸ் செய்தார். அப்பாவை போல ஹீரோவாக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் மகனை போல ஷாருக்கான் மகனும் இயக்குநராக மாறியுள்ளார்.
பிரமாண்டமாக நடந்த ப்ரீமியர்: ஷாருக்கான், பாபி தியோல் என ஏகப்பட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கேமியோவாக நடித்துள்ள பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெப்சீரிஸின் ப்ரீமியர் ஷோ நேற்று மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் எல்லாம் செலிபிரிட்டி ஷோ போட்டால் பெரிதாக முன்னணி நடிகர்கள் எல்லாம் வரமாட்டார்கள். ஆனால், மும்பையில் கதையே வேறு ஷாருக்கானின் வாரிசுக்காக அனைத்து டாப் நடிகர்களும் பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.

குடும்பத்துடன் வந்த அம்பானி: ஆர்யான் கான் வெப்சீரிஸ் ரிலீஸுக்காக முகேஷ் அம்பானி தனது ஒட்டுமொத்த குடும்பத்துடன் ப்ரீமியர் விழாவுக்கு வந்திருந்தார். அம்பானி மகன் திருமணத்தில் ஷாருக்கான் பங்கேற்ற நிலையில், ஆர்யான் கானுக்காக அம்பானி வந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும், ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூர் கையை பிடித்துக் கொண்டே அழகான உடையில் வந்து அனவரையும் கவர்ந்தார். கத்ரீனா கைஃப் கர்ப்பமாக உள்ள நிலையில், விக்கி கவுஷல் சோலோவாக வந்தார். ஷாருக்கான் கையில் காயம் உள்ள நிலையிலும் மகனுக்காக முன்னின்று அனைவரையும் வரவேற்றார். கஜோல் தனது கணவர் அஜய் தேவ்கனுடன் வந்து ஷாருக்கான் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
மனைவியுடன் மாஸ் காட்டிய அட்லி: சாய் அபயங்கரின் பாடலை பேக்கிரவுண்டில் போட்டு ஷாருக்கான் மகன் இயக்கிய பேட்ஸ் ஆஃப் பாலிவுட் ப்ரீமியர் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்துக் கொண்ட வீடியோக்களை எடிட் செய்து அட்லி டீம் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். நெட்பிளிக்ஸில் ஆர்யான் கானின் பேட்ஸ் ஆஃப் பாலிவுட் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்குமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. மகள் சுஹானா கான் உடன் இணைந்து ஷாருக்கான் நடித்து வரும் கிங் திரைப்படம் எப்போது வெளியாகும் என்றும் மீண்டும் ஷாருக்கானை வைத்து அட்லி ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அல்லு அர்ஜுன் படத்தை முடித்த கையோடு ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படத்தையும் அட்லி இயக்க வேண்டும் என கோலிவுட் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











