Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தற்கொலை எண்ணம்.. பைபோலார் டிஸ்ஆர்டருக்கு சிகிச்சை.. வெளிப்படையாக உடைத்து சொன்ன கன்யே வெஸ்ட்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச மாடல் அழகியும் டிவி நடிகையுமான கிம் கர்தாஷியனின் முன்னாள் கணவர் கன்யே வெஸ்ட் தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணம் குறித்தும் பைபோலார் டிஸ்ஆர்டர் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டது குறித்தும் வெளிப்படையாக பேசி உள்ளார்.
அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட் பல நூறு கோடிகளுக்கு அதிபராக உள்ளார். ஆனால், கடந்த 2018ம் ஆண்டு மன நிம்மதியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கே தள்ளப்பட்டது அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது.
கன்யே வெஸ்ட்டின் நடவடிக்கைகள் திடீரென மாறிய நிலையில், அவரை விவாகரத்து செய்வதாக கடந்த ஆண்டு கிம் கர்தாஷியன் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க ராப் பாடகர்
தி காலேஜ் டிராப் அவுட், லேட் ரெஜிஸ்ட்ரேஷன், ஜீசஸ் இஸ் கிங், டோண்டா, டோண்டா 2 என ஏகப்பட்ட ஹிட் ஆல்பங்களை பாடி சர்வதேச ரசிகர்களை கவர்ந்த அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட் தான் தற்கொலை முடிவுக்கு தூண்டப்பட்டது ஏன் எனக் கூறியுள்ள டாக்குமென்ட்ரி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

கிம் கர்தாஷியன் கணவர்
286 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள சர்வதேச மாடல் அழகியும் டிவி நடிகையுமான கிம் கர்தாஷியனின் 3வது கணவர் தான் கன்யே வெஸ்ட். ஆனால், கடந்த ஆண்டு அவருடன் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த ஹாலிவுட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

கிம்மிடம் மன்னிப்பு
கிம் கர்தாஷியன் பற்றி இணையத்தில் ஆபாசமாக பேசியதற்கு தற்போது மனதார மன்னிப்பு கோரியுள்ளார் கன்யே வெஸ்ட். கடந்த 2018ம் ஆண்டு முதல் அழகான அவர் வாழ்க்கையில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தது அவரை முற்றிலும் மனநல பாதிப்புக்குள்ளானவராகவே மாற்றியதாகவும் அந்த நெட்பிளிக்ஸ் டாக்குமென்ட்ரியில் பேசி உள்ளார்.

தற்கொலை எண்ணம்
அரசியலில் ஆசை ஏற்பட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கன்யே வெஸ்ட் போட்டியிட முடிவு செய்தது தான் கிம் கர்தாஷியனை விவாகரத்து செய்யும் முடிவுக்கே தூண்டியதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டே தனக்கே தற்கொலை எண்ணம் ஏற்பட்டதாக தனது டாக்குமென்ட்ரியில் கன்யே கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பைபோலார் டிஸ்ஆர்டருக்கு சிகிச்சை
பைபோலார் டிஸ்ஆர்டர் எனும் இருமுனையப் பிறழ்வு பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கன்யே வெஸ்ட் அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டதாக இதில் கூறியுள்ளார். மேலும், கடந்த 2016ம் ஆண்டு தூக்கம் இல்லாமல் தவித்ததற்காகவும் சிகிச்சை பெற்றதாக கூறியுள்ளார். இப்படி கன்யே வெஸ்ட் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்து உரைத்துள்ள நிலையில், மீண்டும் கிம் கர்தாஷியன் உடன் இவர் சேருவாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.