Don't Miss!
- News
ருசியா இருக்கா..நல்லா சாப்பிடுங்க.. பள்ளி மாணவர்களுக்கு உப்புமா பரிமாறிய முதல்வர்..வேலூரில் கள ஆய்வு
- Sports
ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Technology
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜெய்யுடனான காதல் தான் சினிமா மார்க்கெட் காலியாக காரணமா? நடிகை அஞ்சலி ஓப்பன் டாக்!
சென்னை: நடிகர் ஜெய்யுக்கும் அஞ்சலிக்கும் இடையே ஏற்பட்ட காதல் தான் அவரது சினிமா மார்க்கெட் சரிவதற்கு காரணமா? என்கிற கேள்விக்கு வெளிப்படையாக முதன்முறையாக பதில் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி.
2006ம் ஆண்டு தெலுங்கில் வெளியான போட்டோ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. சில தெலுங்கு படங்களுக்கு பிறகு இயக்குநர் ராமின் கற்றது தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் அஞ்சலி.
வரும் டிசம்பர் 9ம் தேதி அஞ்சலி நடித்துள்ள Fall எனும் வெப்சீரிஸ் வெளியாக உள்ள நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பீஸ்ட் பட ஹீரோயினுக்கு பிராக்கெட் போட்ட சல்மான் கான்... மீண்டும் 56 வயதில் தொடங்கிய காதல் கணக்கு

நிஜமாத்தான் சொல்றியா
"சொல்லுங்க மாமாக்குட்டி" வசனம் இப்போ எப்படி ஃபேமஸ் ஆகியிருக்கோ, அதே போல 15 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கற்றது தமிழ் படத்தில் அஞ்சலி பேசும் அந்த "நிஜமாத்தான் சொல்றியா" என அப்பாவித் தனமாக கேட்கும் வசனம் மிகவும் பிரபலமானது. நடிகை அஞ்சலியை இப்போது ரசிகர்கள் சந்தித்தாலும் அந்த வசனத்தை சொல்ல சொல்வதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார் அஞ்சலி.

ஜெய்க்கு ஜோடியாக
இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. பஸ் விபத்தை வைத்து இப்படியொரு சுவாரஸ்யமான படத்தை இயக்க முடியுமா என பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி நடித்து இருந்தார். அதன் பின்னர் இருவருக்கும் காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.

மார்க்கெட் சரிவு
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அஞ்சலியின் மார்க்கெட் இந்த காதல் வதந்திக்கு பிறகு மொத்தமாக சரிந்து விட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், அது தொடர்பான கேள்விக்கு நடிகை அஞ்சலி செம ஓப்பனாக அளித்துள்ள பதில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அஞ்சலி ஓப்பன் டாக்
சினிமாவில் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர். நடிகர் ஜெய்யும் அதுபோல ஒரு நண்பர் தான். நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்தேன் என சொன்னால், அதற்கு நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும், அதை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். அப்போதும் அதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்பவும் கொடுக்கப் போறது இல்லை என அதிரடியாக பேசியுள்ளார்.

ஓடிடி ஹீரோயின்
தெலுங்கில் கடைசியாக வக்கீல் சாப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அஞ்சலி. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயகக்த்தில் பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இடம்பெற்ற லவ் பண்ணா உட்றணும் குறும்படத்தில் டபுள் ஆக்ஷனில் படு ஹாட்டாக நடித்து மிரட்டி இருந்தார். மேலும், சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஜான்ஸி வெப்சீரிஸிலும் நடித்திருந்தார் அஞ்சலி.

ஃபால் வெப்சீரிஸ்
ஜான்ஸி வெப்சீரிஸை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 9ம் தேதி Fall வெப்சிரீஸ் வெளியாக உள்ளது. எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சித்தார்த் ராமசாமி இந்த வெப்சீரிஸை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார்.