அதுக்கு வாய்ப்பே இல்லை… அடம் பிடிக்கும் அண்ணாச்சி… அடங்க மறுக்கும் தி லெஜண்ட் ஓடிடி ரிலீஸ்!
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் மூலம் மக்களிடம் பிரபலமானவர் அதன் உரிமையாளர் லெஜண்ட் அண்ணாச்சி.
தனது சரவணா ஸ்டோர்ஸ் கடை விளம்பரத்தில் நடித்து வந்த அண்ணாச்சி, முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.
அண்ணாச்சி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது.

லெஜண்ட் அண்ணாச்சி
சென்னையின் அடையாளம் தியாகராய நகர் என்றால், அதன் அடையாளம் சரவணா ஸ்டோர்ஸ் என அனைவரும் அறிந்ததே. சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான லெஜண்ட் அண்ணாச்சி, ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் ஸ்டைலாக என்ட்ரி கொடுத்தார். தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் விளம்பரங்களில் ஆட்டம் போட்ட அண்ணாச்சி, அப்படியே சினிமாவில் கெத்தாக அடியெடுத்து வைத்தார். அதன்படி, அண்ணாச்சியின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவானது தி லெஜண்ட் திரைப்படம்.

சயின்டிஸ்ட் லெஜண்ட்
ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஊர்வசி ரவுத்தேலா, பிரபு, விவேக், விஜயக்குமார் என பெரிய நட்சத்திரக் கூட்டணியில் உருவான 'தி லெஜண்ட்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் அண்ணாச்சி. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் சயின்ட்டிஸ்ட் கேரக்டரில் அதகளம் பண்ண அண்ணாச்சி, ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் ஆல் ரவுண்டராக கலக்கினார். ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியான தி லெஜண்ட் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஓடிடி ரிலீஸ்
தி லெஜண்ட் பெரிய அளவில் சக்சஸ் ஆகவில்லை என்றாலும், அண்ணாச்சியின் தன்னம்பிக்கையை ரசிகர்கள் ரொம்பவே பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தி லெஜண்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். விரைலில் முன்னணி ஓடிடியில் தி லெஜண்ட் ஸ்ட்ரீமிங் ஆகும் எனவும் தகவல் வெளியானது. ஆனால், தி லெஜண்ட் படத்தை ஓடிடியில் வெளியிட விருப்பம் இல்லை என, அண்ணாச்சி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். எந்த காரணம் கொண்டும் ஓடிடி ரிலீஸுக்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறிவிட்டாராம். இதனால், அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

அடுத்த படம்
இதனிடையே லெஜண்ட் அண்ணாச்சியே சொந்தமாக ஓடிடி ப்ளாட்பார்ம் தொடங்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால், அதுவும் வதந்தி என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், அடுத்த படத்தில் நடிக்கவும் முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் அண்ணாச்சி. விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. தி லெஜண்ட் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து பலவிதமான செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கும் ஒரு முடிவு தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











