ஓடிடியில் வெளியாகும் அரண்மனை 3 படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிவரும் படம் அரண்மனை 3.

இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வசூலில் சாதனை புரிந்துள்ளது.

இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை ஜி5 நிறுவனம் பெற்றுள்ள நிலையில் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை 3 படம்

அரண்மனை 3 படம்

நடிகர் ஆர்யா, சுந்தர் சி, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிவரும் படம் அரண்மனை 3. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

சத்யா இசை

சத்யா இசை

சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. அரண்மனையின் முந்தைய படங்களின் சாயல் இந்தப் படத்திலும் இருந்ததாக விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர். தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் சுந்தர் சிக்கே முக்கியத்துவம் உள்ளதாகவும் ஹீரோக்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

இந்நிலையில் இந்தப் படம் ஓடிடியிலும் தற்போது ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஜி5 நிறுவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தப் படம் வரும் 12ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை கலாட்டா

நகைச்சுவை கலாட்டா

விவேக் நடித்துள்ள இந்தப் படத்தில் யோகிபாபு, மனோபாலா உள்ளிட்டவர்களும் நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்திருந்தனர். சுந்தர் சி இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், அரண்மனையின் முதல் இரண்டு பாகங்களை போலவே பல காட்சிகள் இதில் உள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது.

சுந்தர் சி விளக்கம்

சுந்தர் சி விளக்கம்

முன்னதாக படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது சவாலானது என்று சுந்தர் சி தெரிவித்திருந்தார். இதைவிட புதிய படம் ஒன்றை இயக்குவது எளிதானது என்றும் அவர் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு ஏற்றபடியே இந்தப் படம் விமர்சனங்களை பெற்றது.

ரசிகர்களை கவர்ந்த படம்

ரசிகர்களை கவர்ந்த படம்

ஆயினும் திரையரங்குகளில் இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்த படமாகவே அமைந்தது. இந்நிலையில் கொரோனா அச்சம் உள்ளிட்டவை காரணமாக திரையரங்குகளில் படத்தை பார்க்க முடியாதவர்கள் தற்போது ஓடிடியில் இந்தப் படத்தை பார்க்கும்படியாக வரும் 12ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதற்கென அதிகப்படியான தொகை கைமாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X