பொன்னியின் செல்வன் பார்த்துட்டு OTTயில் படங்கள் பார்க்கிறதையே நிறுத்திட்டேன்.. ஏ.ஆர். ரஹ்மான் பளிச்!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனை ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே இயக்குநர் மணிரத்னம் நடத்தி உள்ளார்.

ஐஸ்வர்யா ராய், சியான் விக்ரம், த்ரிஷா, ஏ.ஆர். ரஹ்மான், சரத்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் அந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும் வெளிநாட்டு படங்களை பார்ப்பதையே தான் நிறுத்தி விட்டதாக ஏ.ஆர். ரஹ்மான் பேசியிருப்பது ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்துள்ளது.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக

கேம் ஆஃப் த்ரோன்ஸின் ப்ரீக்வெல் ஹவுஸ் ஆஃப் டிராகன்ஸ், லார்ட் ஆஃப் தி ரிங்ஸின் வெப்சீரிஸ் ரிங்ஸ் ஆஃப் ஃபயர் உள்ளிட்ட பிரம்மாண்ட வெப்சீரிஸ்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஆனாலும், இந்திய படங்களில் இருக்கும் அளவுக்கு ஃபயர் அதில் இல்லை என்கிற குறையை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பொன்னியின் செல்வன் படம் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் அனல் பறக்கும் புக்கிங்

அமெரிக்காவில் அனல் பறக்கும் புக்கிங்

பொன்னியின் செல்வன் நாவலை தமிழ் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆவலுடன் விரும்பி வாங்கி படித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் நாடகம் போட்டாலே ஹவுஸ்ஃபுல் ஆகி வரும் நிலையில் படமாக வரும் நிலையில், நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 4.40 லட்சம் அமெரிக்க டாலருக்கு டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் நாளன்று 1 மில்லியன் டாலர் வசூலை குவித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 நாட்களில்

6 நாட்களில்

இன்னும் வெறும் 6 நாட்களில் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் திரையில் காண உள்ளனர்.

பிரம்மாண்ட புரமோஷன்

பிரம்மாண்ட புரமோஷன்

பொன்னியின் செல்வன் புரமோஷனை இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்தி உள்ளது. சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற அந்த புரமோஷன் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் பேசியது அனைவரையும் ஆச்சரய்த்தில் ஆழ்த்தி உள்ளது.

நெட்பிளிக்ஸ், பிரைம் பார்க்கிறதையே நிறுத்திட்டேன்

நெட்பிளிக்ஸ், பிரைம் பார்க்கிறதையே நிறுத்திட்டேன்

பொன்னியின் செல்வன் படத்துக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் பேசும் போது, பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு நெட்பிளிக்ஸ், பிரைம் உள்ளிட்ட ஓடிடியில் வெளியாகும் வெளிநாட்டு பிரம்மாண்ட படங்களை பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். நம்ம ஊரில் இப்படிப்பட்ட கதைகள் இருக்கு, நம் முகங்களின் நடிப்பு அற்புதம், இதற்காக மணிரத்னத்துக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என பேசி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் அதிகரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X