twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘அயலி’ - தமிழ்சினிமாவில் ஒரு அலையை உருவாக்கி இருக்கிறது!

    |

    இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, அதன் அடுத்த தமிழ் ஒரிஜினல் தொடரான 'அயலி' தொடரை ஜனவரி 26, 2023 அன்று திரையிடுகிறது.. இந்தத் தொடர் தமிழ்ச் செல்வி எனும் இளம் பெண்ணின் வாழ்கையையும், அவளை சுற்றி இருக்கும் சமூகத்தின் பழக்கவழக்கங்களையும் மற்றும் அதன் நம்பிக்கைகளுக்கு எதிரான அவளது போராட்டத்தைச் சுற்றி சுழல்கிறது..தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் சர்வதேச கல்வி தினத்தையொட்டி, இந்தத் தொடரை தமிழ்நாடு முழுவதும் பார்வையாளர்களுக்காக பல்வேறு திரையிடல்களை, ஜீ5 தளம் ஏற்பாடு செய்தது. விரைவில் வரவிருக்கும் இந்த தொடரானது சினிமாத்துறை மற்றும் பார்வையாளர்களால் தான் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. துல்கர் சல்மான், வெங்கட் பிரபு, விஜய் சேதுபதி, மித்ரன் ஆர் ஜவஹர், இயக்குநர் பிரசாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் ட்விட்டரில் இந்த தொடரை பற்றி பேசியும், பாராட்டியும் வருகிறார்கள்.

     Ayali, OTT, Cinema Update, அயலி, ஓடிடி சினிமா அப்டேட்

    S. குஷ்மாவதியின் Estrella Stories தயாரித்து, முத்துக்குமார் இயக்கிய, 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டாக்டராக வேண்டும் என்று கனவு காணும் ஒரு இளம் பெண்ணை பற்றிய சமூக கதை தான் அயலி. வீரப்பன்னை கிராமத்தில் இருக்கும் பழக்கவழக்கங்கள், பெண்கள் பருவமடைந்தவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பின்பற்றப்படும் நடைமுறைகளையும் சுற்றி இந்தக்கதை சுழல்கிறது. இந்த நடைமுறையை கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது அந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, ஒரு இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறாள். லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். நட்சத்திர நடிகர்கள், சமூக செய்தி மற்றும் பொழுதுபோக்கு கதைக்களத்துடன், அயலி ஜனவரி 26 அன்று ஜீ5 இல் திரையிடப்பட உள்ளது.

     Ayali, OTT, Cinema Update, அயலி, ஓடிடி சினிமா அப்டேட்

    ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், "சர்வதேச கல்வி தினத்தையொட்டி, இந்திய சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு எழுச்சியூட்டும் கதையுடன் கூடிய "அயலி" தொடரை ஜீ5 இல் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு வலுவான பெண்ணின் போராட்டங்கள் மற்றும் சாதனைகளைக் காண்பிப்பதன் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை இந்தத் தொடர் எடுத்துக்காட்டுகிறது. நாங்கள் தமிழ்நாட்டிலும் பல திரையிடல்களை ஏற்பாடு செய்தோம், மேலும் இந்த வெப் சீரிஸ் விமர்சகர்கள் மற்றும் தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. "அயலி" மூலம், ஈர்க்கக்கூடிய கதைகளை எங்கள் பார்வையாளர்களுக்கு கொண்டு வந்து அவர்களை மகிழ்விப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    ஜீ5 என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட், தெற்கு தலைமை கிளஸ்டர் அதிகாரி திரு. சிஜு பிரபாகரன் கூறுகையில், "அயலியின் ஜீ5 - இல் ஸ்ட்ரீம் ஆவதற்கு முன்பே இதுபோன்ற அற்புதமான வரவேற்பு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெண்களுக்கு கிடைக்கும் அதிகாரம் மற்றும் பெண் குழந்தை கல்வி தொடர்பான பிரச்சனைகளை முன்னுக்கு கொண்டு வருவதுடன், தொன்மங்களையும் பழைய பழக்கவழக்கங்களையும் பொழுதுபோக்காக உடைத்தெறியும் அயலி இன்று சமூகத்திற்கு பொருத்தமான கதையாக உள்ளது. எனவே, தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் சர்வதேச கல்வி தினத்தின் போது எங்கள் பார்வையாளர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்தோம். சினிமாத்துறை மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கிறது, மேலும் இது ஜீ5 இல் வரும் ஆண்டில் மேலும் ஈர்க்கக்கூடிய மற்றும் பாதையை உடைக்கும் கதைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம்".

    English summary
    Ayali’s impact on Tamil Cinema
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X