Bigg Boss 9: நான் ஆம்பள தான்.. பிக் பாஸில் கெமி ஓபன் ஸ்டேட்மெண்ட்.. ஷாக் ஆன சக போட்டியாளர்கள்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் குறித்த விமர்சனங்கள் பலவும் உள்ளன. அது தொடர்பான விவாதங்களும் இன்னும் குறைந்தது இல்லை. களமிறங்கி உள்ள 20 போட்டியாளர்களும் தங்களது வாழ்க்கையில் நடந்தது குறித்து பேசும் படி பிக் பாஸ் தரப்பில் கூற, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தனது கதையைச் சொன்னார். இது சக போட்டியாளர்களுக்கு அவர் மீதான பார்வையை மாற்றி உள்ளது. இப்படி இருக்கும்போது அப்படி பேசியவர்களில் மற்றொரு போட்டியாளர் கெமி. இவர் கடந்து வந்த பாதை குறித்து அவர் பகிர்ந்து கொண்டது பலரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

கெமி தனது வாழ்க்கையில் ஓரளவுக்கு வளர்ந்த பின்னர் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் போது, " அன்பாக பார்க்க வேண்டிய கண்கள் எல்லாம் என்னை ஆபாசமாக பார்த்துள்ளது. அதிகப்படியான பார்ட் டைம் மாடலிங் பண்ணேன். தொகுப்பாளர் ஆகவேண்டும், நடிகை ஆகவேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன்.

Bigg Boss Tamil 9 Contestant Kemy Gives Open Statement I am A Brave Man Other Contestants Shocked
Photo Credit:

நான் ஆம்பள தான்: நீ ஆம்பள மூஞ்சி, நீ ஆம்பளயா? பொம்பளையானே தெரியல. யாரெல்லாம் என்னை ஆம்பிளை மாதிரி இருக்க என்று சொன்னார்களோ, அவர்கள் எல்லோருக்கும் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தன்னையும் தனது குடும்பத்தையும் மொத்தமாக பார்த்துக் கொண்டு காப்பாற்றுவது ஆம்பளை தனம் என்றால், ஆமாம் நான் ஆம்பளைதான் என்று கூறினார். இவர் இவ்வாறு பேசியதைக் கேட்ட சக போட்டியாளர்கள் கைதட்டி, கெமிக்கு தங்களது அன்பைத் தெரிவித்தனர்.

ஷாக்: கெமி இவ்வாறு கூறியது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் கெமிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இணையவாசிகள் பலரும், உலகம் முழுவதும் உங்களைப் போல பல ஆம்பளைகள் உள்ளார்கள் என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள். உண்மையிலேயே நீங்கதான் சிங்கப் பெண் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் சக போட்டியாளர்கள், கெமியின் வாழ்க்கையில் இப்படி எல்லாமா நடந்துள்ளது என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

மன்னிப்பு: அதேபோல் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் தனது வாழ்க்கை குறித்து பேசும்போது, அவருடன் சண்டை போட்டுக் கொண்ட சக போட்டியாளர்களும் கூட, அவரிடம் மன்னிப்பு கேட்டு உங்களுடன் சண்டை போட்டுக் கொண்டதற்கு மன்னிக்கவும், அதேபோல் நீங்கள் நல்ல மருத்துவர் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், நடிகர் என்று சொன்னால் நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்றும் கலாய்த்தார்கள் இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X