Bigg Boss Eviction: இந்த வார எவிக்ஷனில் வெளியேறப்போவது இவரா.. திவாகருக்கு இந்த இடமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன் முதல் வாரமே பெரிய பெரிய சம்பவங்களை எதிர் கொண்டுவிட்டது. கண்டெண்ட் கொடுத்தால் தான் வீட்டிற்குள் இருக்க முடியும் என்று தெரிந்து கொண்ட பலரும், கண் விழிக்கும் நொடியில் இருந்து, இரவு தூங்கும் வரை கண்டெண்ட்களை கொடுக்க வேண்டும் என்ற வெறியில் உள்ளார்கள். இப்படி இருக்கையில் முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கு நாமினேசன்கள் செய்யப்பட்டது. இதில் முதல் வாரம் என்பதால் எவிக்ஷனுகு வாய்ப்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இப்படி இருக்கும்போது, யார் யாருக்கு எவ்வளவு வாக்குகள் ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த வாரத்தில் சக போட்டியாளர்களால் அதிக நாமினேட் செய்யப்பட்டவர் என்றால் அது, கலையரசன் தான். அவருக்கு மட்டும் மொத்தம் 12 போட்டியாளர்கள் நாமினேட் செய்திருந்தனர். அதற்கு அடுத்த இடத்தில் 7 வாக்குகளுடன் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இருந்தார். இப்படி இருக்கும்போது இந்த வாரத்தில் யார் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்தது. இப்படி இருக்கையில் இந்த வாரத்தில் குறைந்த வாக்குகள் யார் பெற்றுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வாட்டர் மெலன் ஸ்டார்: அதாவது பலரும் முதல் வாரத்திலேயே வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இப்படி இருக்கும்போது அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இணையவாசிகள் அதிகம் ட்ரோல் செய்யும் கண்டெண்ட்டுகளை வாட்டர் மெலன் திவாகர் கொடுத்து வருவதால், அவர் தொடர்ந்து ஆட்டத்தில் நீடித்தால் ரசிகர்கள் அவரை தொடர்ந்து ட்ரோல் செய்யலாம் என்று பேசி வருகிறார்கள்.
கலையரசன்: அதேபோல் அதற்கு அடுத்த இடத்தில், ஆதிரையும் அதற்கும் அடுத்த இடத்தில் வியானாவும் உள்ளார்கள். நான்காவது இடத்தில் பிரவின் ராஜ் உள்ளார். இவருக்கு அடுத்து அப்சரா உள்ளார். இப்படி இருக்கும்போது, பிக்பாஸ் விமர்சகர்களை நாய்கள் என்று விமர்சித்தவரும் சக போட்டியாளர்களால் அதிகம் நாமினேட் செய்யப்பட்டவருமானா, கலையரசன் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளார். கடைசி இடத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி உள்ளார்.
டேன்சர் சோன்: இந்த வாரம் நாமினேசன் நடைபெற்றால் கட்டாயம் பிரவீன் காந்தி வெளியேற தான் அதிக வாய்ப்புகள் உள்ளது.ஒருவேளை ரசிகர்களின் வாக்குகள் கடைசி நேரத்தில் பிரவீன் காந்திக்கு அதிகம் கிடைத்தால், கலையரசன் தான் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம்தான் முதல் வாரம், இந்த முதல் வாரத்தில் இருந்தே விஜய் சேதுபதிக்கு வேலை அதிகம் உள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











