Bigg Boss Tamil 9: முதல் வாரத்திலேயே வெளியேற போவது அவர்தானா? எதுக்கு உள்ளே வந்தாருன்னே தெரியல!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 5ம் தேதி தடபுடலாக தொடங்கியது. ஏற்கனவே பலூன் அக்கா, வாட்டர்மெலான் திவாகர், அகோரி கலையரசன், விஜே பார்வதி உள்ளிட்ட போட்டியாளர்கள் வரப்போறாங்க என சொன்னாலும், ரசிகர்கள் கடைசி நேரம் வரை பிக் பாஸ் டீம் அவங்களை எல்லாம் உள்ளே விடாது என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களது என்ட்ரி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியதை விட கடுப்பில் ஆழ்த்தியது தான் அதிகம்.
நாமினேஷன் பண்ணும் போது, எப்படி ஆதிரை வாட்டர்மெலான் திவாகர் எல்லாம் பிக் பாஸ் போட்டியாளராக தேர்வாகி இங்கே வந்துருக்கார் என்றே தெரியவில்லை என்றும் அவருக்கு இந்த இடம் தகுதியான இடமில்லை என நெத்தியடியாக சொல்லி நாமினேட் செய்தாரோ அதே போலத்தான் ரசிகர்களும், அரோரா சின்க்ளேர் எல்லாம் உள்ளே வந்த நிலையில், அடுத்த சீசனில் பீரோ அக்கா, ரீல்ஸ் அக்கா எல்லாம் வந்துவிடுவார்களா என்றும் வாட்டர் மெலான் திவாகர் போல கண்டதை பண்ணினால் பிக் பாஸ் போட்டியாளர் ஆகிவிடலாம் என நினைத்து பலரும் பைத்தியங்களாக திரிவார்கள் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் யார் யார் எல்லாம் சிக்கியிருக்கின்றனர் என்பது குறித்தும் முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு எதுக்கு வந்தோம் ஏன் வந்தோம் என ஓடப் போகும் நபர் யார் என்பது குறித்து இங்கே அலசுவோம் வாங்க..
நாமினேஷன் லிஸ்ட்: முதல் நாளில் இருந்தே சண்டை போட வேண்டும் என இந்த முறையும் இன்ஃப்ளூயன்சர்கள் அலப்பறை கிளப்பி வருகின்றனர். ஆனால், இதெல்லாம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது தான் பெரிய டவுட். ஆதிரை, வியன்னா, வாட்டர்மெலான் திவாகர், அகோரி கலையரசன், இயக்குநர் பிரவீன் காந்தி, ஹாலிவுட் நடிகராக ஆசைப்படும் பிரவீன் ராஜ் மற்றும் திருநங்கை போட்டியாளர் அப்சரா உள்ளிட்டோர் முதல் வார நாமினேஷன் பட்டியலில் சிக்கியுள்ளனர்.
திவாகர் தப்பிச்சுடுவாரு: வாட்டர்மெலான் திவாகர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை என்டர்டெயின்மென்ட் இருக்கும் என்பதால் அவருக்கு ரசிகர்கள் ஓட்டு போட்டு வருகின்றனர். ஆதிரை அதிக வாக்குகளுடன் இருக்கும் நிலையில், அடுத்த இடத்தில் திவாகர் இருப்பது தான் ஆச்சர்யம். மேலும், வியன்னா, பிரவின் ராஜ் சேஃப் ஜோனில் தான் உள்ளனர்.
டேஞ்சர் ஜோன்: திருநங்கை அப்ஸாரா, அகோரி கலையரசன் மற்றும் இயக்குநர் பிரவீன் காந்தி உள்ளிட்ட 3 பேர் தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். அதிலும், ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி தான் கடைசி இடத்தில் ஆன்லைன் ஓட்டிங்கில் உள்ள நிலையில், அவருக்கா இந்த நிலைமை என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
வெளியேறப்போவது யாரு?: தர்பூசணியை வீட்டுக்கு பார்சல் பண்ணிடுங்க என்று உள்ளே இருப்பவர்களே விரும்பினாலும், அவர் இப்போதைக்கு போக மாட்டார் என்றே தெரிகிறது. அகோரி கலையரசன் தான் எதுக்கு உள்ளே வந்தார், என்ன பண்றாரு என்றே தெரியாமல் உள்ள நிலையில், முதல் வாரத்தில் அவர் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. பிரவீன் காந்தி அல்லது அகோரி கலையரசன் இருவரில் ஒருவர் வெளியேறப்போவது நிச்சயம் என்றே தெரிகிறது, போக போக பார்ப்போம் என்ன ட்விஸ்ட் நடக்கிறது என்று.


Click it and Unblock the Notifications











