42 நாட்கள்...13 போட்டியாளர்கள்...ஓடிடி.,யில் புதிய பிக்பாஸ்...24 மணி நேர ஒளிபரப்பா ?

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து ஐந்து சீசனை எட்டி உள்ளது. ஐந்தாவது சீசனும் நிறைவடைய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே மீதமுள்ளது. டைட்டிலை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் கடந்த சீசன் முடிந்ததும் இந்நிகழ்ச்சி மீதான ரசிகர்களின் ஆர்வத்தை குறைய விடாமல் பீக்கிலேயே வைத்திருக்க பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தியது. இதில் பிக்பாஸ் நான்கு சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

சேஃப் கேம் ஆடும் போட்டியாளர்கள்

சேஃப் கேம் ஆடும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் ஜோடிகள் முடிவடைந்ததும் பிக்பாஸ் சீசன் 5 துவங்கியது. அதிக எதிர்பார்ப்புக்களுடன் துவங்கப்பட்டாலும், போக போக டல் அடிக்க துவங்கியது. கமல் பலமுறை எச்சரித்தும் போட்டியாளர்கள் பலர் இதுவரை சேஃப் கேம் ஆடி வருகிறார்கள். கடந்த நான்கு சீசன்களையும் பார்த்து விட்டு வந்ததால் ஒவ்வொருவரும் மிக கவனமாக விளையாடி வருகிறார்கள்.

ஸ்கிரிப்டட் தானோ

ஸ்கிரிப்டட் தானோ

அதுவும் தாங்கள் சண்டை போடுவது உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் சொல்லி தான் செய்வதாக தாமரையே தனது கணவரிடம் கூறியது போன்றவை பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என்பது உண்மை தானோ என்ற கேள்வியை அனைவர் மனதிலும் எழுப்பி உள்ளது. ராஜுவை எடுத்துக் கொண்டால் கடந்த சீசன் ஆரியை போல் கவனமாக விளையாடுகிறார், டைட்டில் வின் பண்ணுவார் என கூறப்பட்டாலும், ஆரியை போல் இல்லாமல், யார் என்ன செய்தாலும் எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டாமல் இருந்து வருகிறார்.

ஸ்டார் விஜய் புதிய ஐடியா

ஸ்டார் விஜய் புதிய ஐடியா

இதனால் ஐந்தாவது சீசனில் சுவாரஸ்யம் மட்டுமல்ல, பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதன் காரணமாக பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, ரசிகர்களை ஈர்க்க ஸ்டார் விஜய் புதிய யோசனை ஒன்றை கையில் எடுத்துள்ளது.

ஓடிடி.,யில் பிக்பாஸ்

ஓடிடி.,யில் பிக்பாஸ்

ஐந்தாவது சீசன் முடிந்ததும் ஓடிடி.,யில் 12 அல்லது 13 போட்டியாளர்கள், 42 நாட்கள் கொண்ட மினி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாம். இதில் பிக்பாஸில் ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற வெற்றியாளர்கள் தவிர, மற்ற போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனராம். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாம். தெலுங்கில் பிப்ரவரி மாதமும், தமிழில் ஜனவரி 23 ம் தேதி முதல் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 27th December 2021 - Promo 1 | யார் Ticket to Finale-கு தகுதி இல்லாதவர்?
24 மணி நேர ஒளிபரப்பா

24 மணி நேர ஒளிபரப்பா

அதே சமயம் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதா அல்லது எடிட் செய்யப்பட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் தெலுங்கில் ஓடிடி.,யில் பிக்பாஸ் நடத்தப்பட உள்ளதை நாகர்ஜுனாவே அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X