Bigg Boss: முதல் நாளே குறட்டை பிரச்னை.. திவாகருக்கு ஆதரவாக பேசிய அரோரா.. என்ன மனசுப்பா!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நேற்று முதல் அதாவது அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இப்படி இருக்கும்போது, மொத்தம் 20 போட்டியாளர்களுடன் தொடங்கி உள்ளது. இம்முறை களமிறங்கி உள்ள போட்டியாளர்கள் சிலர் சின்னத்திரை பிரபலங்கள், சிலர் சமூக வலைதளங்களில் இன்ஃபுளியன்சர்களாக இருப்பவர்கள், தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரவீன் காந்தியும் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இந்த சீசன் போட்டியாளர்கள் குறித்து பலருக்கும் பல விமர்சனங்கள் தொடக்கத்தில் உள்ளது. ஆனால் போக போக ஆட்டத்தின் தன்மை மாற மாற போட்டியாளர்களின் மீதான பார்வையும் கண்ணோ ட்டமும் மாறும்.

இப்படி இருக்கும்போது, மொத்தம் 20 போட்டியாளர்களில் ரசிகர்கள் பலரும் தற்போது விமர்சித்து வருவது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் அரோரா ஆகியோரை தான். திவாகரைப் பொறுத்தவரையில் அடிப்படையில் பிசியோதெரபி மருத்துவர் என்றாலும், ரீல்ஸ்கள் பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர். சினிமாக்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படி இருக்கும்போது முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் அவர்தான்.

Bigg Boss Tamil Season 9 Aurora Sinclair Spokes Matured Things About Diwakar Snoring
Photo Credit:

அரோரா: அதேபோல் இரண்டாவது போட்டியாளராக களமிறக்கப்பட்ட அரோரா குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அவரது கடந்த கால சமூக வலைதள பதிவுகள், அதனால் அவரை இணையவாசிகள் சுட்டிக் காட்டும் பெயர் ஆகியவற்றுடன் சேர்த்து மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

திவாகர் குறட்டை: இதெல்லாம் ஒரு புறம் இருக்க, முதல் நாளில் அனைவரும் உறங்கும் போது, திவாகர் குறட்டை விட்டிருப்பார் போலத் தெரிகிறது. இது சக போட்டியாளர், கமருதீன் திவாகரிடத்தில் இது குறித்து பேசி இருப்பார் போலத் தெரிகிறது. இதனால் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் கமுருதின் இடம் அரோரோ தனியாக இது குறித்து பேசும்போது, " திவாகர் உறக்கத்தில் தன்னிலை மறந்து தூங்கிக் கொண்டு உள்ளார். குறட்டையை அவரால் எப்படி கட்டுப் படுத்த முடியும். வெள்ளந்தியாக தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள், நமது வீட்டில் நமது அப்பா அம்மா தூங்கும்போது குறட்டை விட்டால் நம்மால் என்ன செய்ய முடியும்.

Bigg Boss Tamil Season 9 Aurora Sinclair Spokes Matured Things About Diwakar Snoring
Photo Credit:

பாராட்டு: இதுவே சவுண்ட் ப்ரூஃப் ரூம் இருந்தால் அவர் அங்கு போய் தூங்கப் போகிறார். அதை விடுத்து, அவரைக் குறை சொல்லி என்ன ஆகப்போகிறது" என்று கூறுகிறார். அதே நேரத்தில், " திவாகரிடம் பலரும் பேட்டிகளில் எல்லாம் சொல்லி உள்ளார்கள். ஆனால், அவர் அதைப் புரிந்து கொள்வது இல்லை. மாறக, தன்னிடம் வந்து யாராவது பேசினாலே, புரோமோவில் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வருகிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார். அவரது மனதில் அப்படி உள்ளது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும். நாம் நல்லது சொல்லப் போனால் கூட அதைப் புரிந்து கொள்ளாமல் கத்துவாரோ என்றுதான் பயமாக உள்ளது" என்று பேசுகிறார். இவரது இந்தப் பேச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அரோரோவின் பேச்சுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. திவாகர் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே பலரையும் எரிச்சல் படுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X