Bigg Boss: இன்னைக்கு எனக்கு பீரியட்ஸ்.. வாட்டர் மெலன் ஸ்டாரிடம் சொன்ன VJ பார்வதி.. அடுத்து என்ன ஆச்சு?
சென்னை: பிக்பாஸ் என்றாலே எப்போதும் பஞ்சாயத்து நடக்கும் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக, ஆட்டம் தொடங்கிய முதல் வாரத்திற்குள்ளே இவ்வளவு பிரச்னை நடக்கிறது என்றால் ரசிகர்களுக்கே தலை சுத்தும் அளவுக்கு ஆகிவிட்டது என்று கூறலாம். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், லக்சுரி ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டும். இப்படி இருக்கும்போது, லக்சுரி ஹவுஸை சுத்தம் செய்யச் சொல்லி சொல்கிறார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து VJ பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை தேர்வு செய்து அனுப்புகிறார்கள். இவர்கள் இருவரும் அந்த வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது பேசிக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, VJ பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் லக்சுரி வீட்டை சுத்தம் செய்ய அந்த வீட்டிற்குள் சென்றார்கள். அப்போது லக்சுரி வீட்டில் இருக்கும் போட்டியார்களில் சிலர் குறிப்பாக ரம்யா ஜோ மற்றும் சுபா என இருவரும் VJ பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை வேலை வாங்குகிறோம் என்று நடந்து கொண்ட விதம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இப்படி இருக்கையில் அந்த அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது VJ பார்வதி, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை நோக்கி, " இன்னைக்குனு பாத்து எனக்கு பீரியட்ஸ் அண்ணா. சீக்கிரமே இந்த இடத்தை விட்டு போகனும்" என்று கூறுகிறார். உடனே வாட்டர் மெலன் ஸ்டாரோ, " அய்யய்யோ.. அது இன்னும் வலியாகத்தானே இருக்கும். கிராம்ப்ஸ் எல்லாம் இருக்குமே . பீரியட்ஸோடு நீ ஏன் வேலை செய்யுற. எங்கிட்ட கொடு நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறுகிறார். அதற்கு VJ பார்வதி, " பரவாயில்லை அண்ணா. முதலில் இந்த இடத்தை விட்டுப் போனால் போதும்" என்கிறார்.
இவர்களின் இந்த உரையாடலைப் பார்த்த இணையவாசிகளும் ரசிகர்களும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரைப் பாராட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, "பெண்ணின் நம்பிக்கையை வெல்வது கடினம். வென்று விட்டாய் மனிதனாக. ஆண்களில் உயர்ந்தவரே" என்று எல்லாம் கமெண்ட் போட்டு வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சிலரோ திவாகரை இந்த சீசனின் கண்டெண்ட் கிங் என்றும் பார்வதியை கண்டெண்ட் குயின் என்றும் குறிப்பிடுவதையும் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











