நீங்க பார்க்க ரெடியா?..ஓடிடியில் வெளியாகும் கோப்ரா..எந்த ஓடிடி தளம்னு தெரியுமா?
சென்னை : சீயான் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்த கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
மேலும், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கோப்ரா கதை
கணக்கு வாத்தியாரானா விக்ரம், கணித முறையில் வித்தியாசமான தொடர் கொலைகளை செய்கிறார். மர்மமாக நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் அதிகாரியாக இர்ஃபான் பதான் களமிறங்குகிறார். அப்போது அவருக்கு கொலைக்கான காரணம் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் தெரிகிறது. இதில் விக்ரம் யார், அவர் ஏன் கொலை செய்கிறார் என்பது தான் கோப்ரா படத்தின் கதை.

கோப்ரா பம்மியது
விநாயகர் சதுர்த்திக்கு வெளியான இத்திரைப்படம் முதல் நாளே பல மோசமான விமர்சனத்திற்குள்ளானதால், இரண்டாவது நாள் படத்தை பார்க்க யாருமே தியேட்டர் பக்கம் போகவில்லை. கோப்ரா படம் எடுத்து பாயாமல்... சியான் விக்ரமின் கோப்ரா பம்மி விட்டது என மீம்ஸ்களை நெட்டிசன்கள் போட்டு பயங்கரமாக ட்ரோல் செய்தனர்.

புரியவில்லை
கோப்ரா படம் வெளியான போது படம் 3 மணிநேரம் 3 நிமிடம் 3 செகண்ட் ரன்னிங் டைம் இருந்ததால் ரசிகர்கள் கடுப்பாகி விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, படத்தின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டது. ஒரு சிலர் படம் ஒன்னுமே புரியவில்லை என்றாலும், சிலர் படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு என்றும் இந்த படத்தை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்றும் கூறிவந்தனர்.

ரசிகர்கள் தயார்
இந்நிலையில், கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 28ஆம் சோனி லைவ் ஓடிடித்தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஒருமுறை பார்த்த புரியாது மீண்டும் மீண்டும் பார்த்தால் புரியும் என இயக்குநர் கூறியிருந்த நிலையில் இந்த படத்தை காண ரசிகர்கள் தயாராகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











