மாநாடு ஓடிடி, டிவி ரிலீஸ் எப்போ... வெளியான கலக்கல் தகவல்

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. நீண்ட தாமதம் மற்றம் போராட்டத்திற்கு பிறகு நவம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இது நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த படம் சிம்புவிற்கு நிஜமாகவே மற்றொரு புதிய ஆரம்பமாக அமைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாளிலேயே ரூ.8 கோடிக்கு வசூல் செய்து, மிகுந்த பாராட்டு மற்றும் வரவேற்பை பெற்ற சிம்பு படம் என்றால் அது மாநாடு தான்.

கேம் சேஜ்சர்

கேம் சேஜ்சர்

மாநாடு படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் சிம்புவிற்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவிற்கே மிகப் பெரிய கேம் சேஜ்சராக இருக்கும் என பேசப்படுகிறது. டைம் லூப்பை மையமாகக் கொண்ட முதல் தென்னிந்திய படம் மாநாடு என்றே சொல்லலாம். இருந்தாலும் டைம் லூப்பை மிக சரியாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளார் டைரக்டர் வெங்கட் பிரபு.

விற்பனையாகாத உரிமம்

விற்பனையாகாத உரிமம்

ரிலீசுக்கு முதல் நாள் வரை பிரச்சனை நடந்து கொண்டிருந்ததால், ரிலீசை ஒத்திவைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்து விட்டார். ஆனால் ரசிகர்கள் கோபமடைந்து, கொந்தளித்து விட்டதால் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தி, கடைசி நிமிடத்திலேயே மாநாடு படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநாடு படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமங்கள் விற்கப்படாமலேயே இருந்தன.

வாங்க போட்டா போட்டி

வாங்க போட்டா போட்டி

லேட்டஸ்ட் தகவலாக மாநாடு படம் ரிலீசாகி, நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் டிவி மற்றும் ஓடிடி.,யில் ஒளிபரப்பாகும் உரிமங்கள் முடிவாகி விட்டனவாம். தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு டிஜிட்டல் உரிமத்தை போட்டி போட்டுக் கொண்டு Sony Liv ம், சேட்டிலைட் உரிமத்தை ஸ்டார் விஜய்யும் வாங்கி உள்ளனவாம். முதலில் மாநாடு படத்தை வாங்க மறுத்த விஜய் டிவி, தற்போது அதிக விலை கொடுத்து சேடிலைட் உரிமத்தை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அப்போ ஓடிடி ரிலீஸ்

அப்போ ஓடிடி ரிலீஸ்

தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு 3 நாட்கள் மட்டும் ஆகி உள்ளது. முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மாநாடு படம் 14 கோடிகளை வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே நேற்று அப்டேட் வெளியிட்டிருந்தார். இதனால் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு 4 வாரங்கள் நிறைவடைந்த பிறகே ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

Recommended Video

Maanaadu Review | Yessa ? Bussa ? | Silambarasan | S J Suryah | Venkat Prabhu | Filmibeat Tamil
டிவி ரிலீஸ் எப்போ தெரியுமா

டிவி ரிலீஸ் எப்போ தெரியுமா

அதே போல் மூன்று மாதங்களுக்கு பிறகே மாநாடு படம் டிவி.,யில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். அந்த வகையில் பொங்கல் சிறப்பு திரைப்படமாக விஜய் டிவி.,யில் மாநாடு படம் ஒளிபரப்பப்படலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X