Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஓடிடியில் முதல்நாளில் அதிகமானோர் பார்த்த படம்... அட்ராங்கி ரேவிற்கு கிடைத்த சிறப்பு
மும்பை : நடிகர் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த கிறிஸ்துமசையொட்டி ஓடிடியில் வெளியான படம் அட்ராங்கி ரே.
முக்கோண காதல் கதையாக வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது.
வெள்ளை
புறா
ஒன்று
ஏங்குது
கையில்
வராமலே..
நிவேதா
பெத்துராஜ்
அட்டகாசமான
புகைப்படங்கள்!
இந்நிலையில் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

அட்ராங்கி ரே படம்
பாலிவுட்டில் நடிகர் தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் ஒடிடியில் நேரடியாக வெளியான படம் அட்ராங்கி ரே. ராஞ்சனா, ஷமிதாப் படங்களுக்கு பிறகு பாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

முக்கோண காதல் கதை
படத்தில் மேஜிஷியனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவரது காதலியை தனுஷ் திருமணம் முடிப்பதாகவும், திருமணத்திற்கு பின்பு தனுஷ் மீதான சாரா அலிகானின் காதலும் இந்தப் படத்தின் கதைக்களமாக காணப்படுகிறது.

சிறப்பான தனுஷின் நடிப்பு
படத்தில் தனுஷின் நடிப்பு சிறப்பாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான நிலையில், படத்திற்கு முதல் நாளிலேயே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் பின்னணி மற்றும் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

ஆனந்த் எல் ராய் இயக்கம்
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. தனுஷிற்கு தமிழில் உள்ள ரசிகர்களை கருத்தில் கொண்டு இந்தப் படம் தமிழில் வெளியானது.

ஓடிடியில் அதிகமானோர் பார்த்த படம்
இந்நிலையில் இந்தப் படத்திற்கு தற்போது மேலும் ஒரு சிறப்பு ஏற்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ள படங்களில் முதல் நாளில் அதிகமானோர் பார்த்துள்ள படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் எவ்வளவு பேர் பார்த்தார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்ததாக அவர் ஹாலிவுட் படமான க்ரே மேன், தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது நானே வருவேன் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.