twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷின் கேப்டர் மில்லர் ஓடிடி ரைட்ஸை தட்டி தூக்கிய அமேசான்… ரிலீஸுக்கு முன்பே கோடிகளில் பிசினஸ்!

    |

    சென்னை: தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் கமிட் ஆகியுள்ளார் தனுஷ்.

    கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இப்போது ஓடிடி உரிமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தனுஷ், யுவன் குரல்களில் ரெண்டு ராஜா… அதிரிபுதிரியாக வெளியானது நானே வருவேன் செகண்ட் சிங்கிள்தனுஷ், யுவன் குரல்களில் ரெண்டு ராஜா… அதிரிபுதிரியாக வெளியானது நானே வருவேன் செகண்ட் சிங்கிள்

    கேப்டன் மில்லரான தனுஷ்

    கேப்டன் மில்லரான தனுஷ்

    திருச்சிற்றம்பலத்தை முடித்த கையோடு நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியையும் கன்ஃபார்ம் செய்துவிட்டார் தனுஷ். செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கமிட்டான 'வாத்தி' படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார்.

    பூஜையுடன் தொடங்கிய கேப்டன் மில்லர்

    பூஜையுடன் தொடங்கிய கேப்டன் மில்லர்

    பீரியட் திரைப்படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆக்சன் காட்சிகளை ரொம்பவே ராவாக எடுப்பதில் கில்லாடியான அருண் மாதேஸ்வரன் தனுஷுடன் இணைந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 22ம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

    கேப்டன் மில்லர் பூஜை வீடியோ வெளியீடு

    கேப்டன் மில்லர் பூஜை வீடியோ வெளியீடு

    இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் கமிட் ஆகியுள்ள பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், குமரவேல், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தென்காசி பகுதிகளில் செட் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக உருவாகும் கேப்டன் மில்லர் படம், அடுத்தாண்டு திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. விரைவில் தனுஷும் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான்?

    ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான்?

    தனுஷின் படங்களுக்கு திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றுவதிலும் முன்னணி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், அமேசான் ப்ரைம் நிறுவனம் கேப்டன் மில்லர் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் 38 கோடி ரூபாய்க்கு கேப்டன் மில்லர் ஓடிடி உரிமை விலை போயுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷூட்டிங் முடியும் முன்னரே கேப்டன் மில்லர் ஓடிடி ரைட்ஸ் முடிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Dhanush's next act in Arun Matheswaran directing Captain Miller film. Sathya Jothi films produce this film with a huge budget. A few days before Captain Miller shoot starts with a pooja in Chennai. It has been reported, Dhanush’s Captain Miller film post-theatrical digital rights bagged by Amazon Prime for a whopping amount of 38 crores
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X