தனுஷின் இட்லி கடை.. ஓடிடியில் வெளியாகி ஓவர் அடி வாங்குதே.. சத்தியமா இதை எதிர்பார்த்திருக்கமாட்டார்

சென்னை: தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் தியேட்டர்களில் கடந்த மாதம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்து இயக்குநர் செல்வராகவன் எல்லாம் பாராட்டியிருந்தார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது படம். திரையரங்குகளில் கிடைத்த ரெஸ்பான்ஸ் இங்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த தனுஷுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு பெரிய ஹிட் எதுவும் கிடைக்காமல் இருந்தது. அவர் நடிப்பில் வெளியான படங்கள் மட்டுமின்றி இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் படுத்தேவிட்டது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவரே இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இட்லி கடை படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இது பாசிட்டிவ் ரிசல்ட்டை கொடுக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு படம் பார்க்க போயிருந்தார்கள் ரசிகர்கள்.

ஓரளவுக்கு வரவேற்பு: தனது சிறு வயது அனுபவங்கள், தான் பார்த்த மனிதர்களை வைத்து கதையையும், திரைக்கதையையும் எழுதியிருந்தார் அவர். படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் இட்லி கடை ஃபீல் குட் படமாக இருக்கிறது என்று கொண்டாடினார்கள். தனுஷை வளர்த்தெடுத்த இயக்குநர் செல்வராகவனும் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தை ஏகத்துக்கும் புகழ்ந்து போஸ்ட் போட்டிருந்தார்.

Dhanush s Idli Kadai Faces OTT Backlash Fans Troll Scenes After Netflix Release
Photo Credit:

வசூலிலும் சூப்பர்: விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் வசூலில் டீசன்ட்டான நிலையை அடைந்தது. உலகம் முழுவதும் மொத்தம் 50 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவித்தது. தனுஷின் மார்க்கெட் அளவுக்கு இது குறைவானதுதான் என்றாலும் இதற்கு முந்தைய படங்கள் பெற்ற வசூலுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டது படக்குழு. தனுஷும் ஹேப்பிதான் என்று விவரமறிந்தவர்கள் சொன்னார்கள்.

ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டர்களில் படத்துக்கான மவுசு குறைந்ததை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதிலும் ரெஸ்பான்ஸ் பெருமளவு கிடைக்கும் என்றே தனுஷ் நினைத்திருப்பார். ஓடிடியில் ரிலீஸ் ஆகும்போது ப்ரோமோஷனுக்காக வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக ஓடிடி ரிலீஸ் ரிசல்ட் அமைந்துவிட்டது.

என்ன நடந்தது?: அதாவது ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் இட்லி கடையை துவம்சம் செய்துவருகிறார்கள். திரையரங்கு ரிலீஸின்போதே அவர் படத்தில் குல தொழிலை ஆரம்பிக்கிறாரா என்று விமர்சனத்தை முன்வைத்தார்கள். இப்போதோ படத்தை சீன் பை சீனாக பிரித்து மேய்ந்துவருகிறார்கள். தனுஷின் கனவில் ராஜ்கிரண் வரும் காட்சியை பார்த்து, இது என்ன ஆனந்தபுரத்து வீடு சீன் மாதிரி இருக்கிறது என கலாய்க்கும் அவர்கள்; படத்தில் தனுஷ் இட்லி கடையை அதிகாலையில் திறப்பதற்கு முன்பு குளிக்கும் காட்சியையும் விடவில்லை. அந்தக் காட்சியில் அவர் குளிக்கும்போது குளிரில் நடுங்குவது போல் ஆக்‌ஷன் செய்திருந்தார். அதை பார்த்து, 'அருகிலேயே சுடுதண்ணீர் இருக்கும்போது இவர் ஏன் பச்சை தண்ணியில் குளிக்கிறர்' என்று துவைக்கிறார்கள்.

ஒரே இரவில் எப்படி?: அதுமட்டுமின்றி படத்தின் க்ளைமேக்ஸில் தனுஷுக்கு குண்டடி பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்புவது போன்று வரும். அது எப்படி ஒரே இரவில் குண்டடியும் பட்டு சிகிச்சையும் பெற்று உடனே டிஸ்சார்ஜ் ஆவார் என்று வைத்து செய்துவருகிறார்கள். இதேபோல்தான் அவரது 50ஆவது படமான ராயன் ஓடிடியில் வெளியானபோதும் ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X