தனுஷின் வாத்தி ஓடிடி உரிமைக்கு அடித்த ஜாக்பாட்… ரிலீஸுக்கு முன்பே செம்ம கெத்து தான் போங்க…
சென்னை: தனுஷின் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.
திருச்சிறம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை கடந்த நிலையில், நானே வருவே கொஞ்சம் தடுமாறியது.
இந்நிலையில், தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 'வாத்தி' படத்தின் ஓடிடி உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாடம் எடுக்கும் வாத்தி
தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்து கெத்து காட்டியது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வெளியான தனுஷின் நானே வருவேன், வசூலில் தடுமாறினாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிஸியாகிவிட்டார். இதனிடையே வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

வாத்தி டிசம்பரில் ரிலீஸ்
தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள வாத்தி படத்தை, சித்தாரா எண்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு ஐத்தராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதனிடையே வாத்தி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் வாத்தி என்ற டைட்டிலிலும், தெலுங்கில் சார் என்ற தலைப்பிலும் இந்தப் படம் வெளியாகிறது. டீசரை வெளியிட்ட படக்குழு, வாத்தி டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டது.

வாத்தி ஓடிடி ரைட்ஸ்
தனுஷ் வாத்தியாராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் கமிட் ஆகியுள்ளார். மேலும், இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தனுஷின் படங்களுக்கு தியேட்டர்களைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு காணப்படுவதால், வாத்தி படத்தின் உரிமையை கைப்பற்றவும் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டன.

ஆஹா ஓடிடியில் வாத்தி
இந்நிலையில், வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ஆஹா ஓடிடி தளம், தமிழில் நல்ல படங்களை தட்டித் தூக்கி வருகிறது. தனுஷின் வாத்தி தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாவதால், இருதரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், அது எத்தனை கோடிகளுக்கு விலை போனது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











