தனுஷின் இட்லி கடை பெற்ற சூப்பர் ரெஸ்பான்ஸ்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. படக்குழுவின் செம முடிவு
சென்னை: தனுஷ் தானே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இட்லி கடை. இதில் அவருடன் ராஜ் கிரண், அருண் விஜய், பார்த்திபன், நித்யா மேனன் என பலர் நடித்திருக்கிறார்கள். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. அப்படிப்பட்ட நிலைமையில் நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற ஆரம்பித்திருக்கிறது.
நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கும் தனுஷ் முதலில் ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டோரை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கினார். அப்படத்தில் அவரும் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து அவர் இயக்கிய ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. இதனால் அவரும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட்தான்.
இட்லி கடை: நிலைமை இப்படி இருக்க இப்போது அவர் இட்லி கடை படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது.ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஆகாஷ் தயாரித்திருக்கிறார். நேற்று இப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. தனுஷின் ரசிகர்களும் ஆழமான நம்பிக்கையை படத்தின் மீது கொண்டிருந்தார்கள்.

எப்படி இருக்கு படம்?: எப்படியாவது இந்தப் படத்தில் தங்கள் தனுஷ் கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர்களது எண்ணம் நிறைவேறியது. இயக்கத்தில் தான் தேர்ந்துவிட்டேன் என பல இடங்களில் அவர் உணர்த்திவிட்டார் என்று கொண்டாடும் ரசிகர்கள்; நடிப்பில் வழக்கம்போல் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை தனுஷ் எடுத்துவிட்டார் என்று புகழாரம் சூட்டுகின்றார்கள்.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி: முக்கியமாக முதல் நாளிலேயே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இந்தப் படம் மாறியிருக்கிறது. அதிலும், சமீபமாக வந்த பெரிய படங்களில் மதராஸி ஓகே ரகம் என்றும், இட்லி கடை சூப்பர் ரகம் என்றும் மார்க் போடவும் விமர்சகர்கள் தொடங்கிவிட்டார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும்; வரும் நாட்களில் வசூல் நிலவரம் உயரும் என்றும் Sacnilk இணையதளம் குறிப்பிட்டிருக்கிறது.
எப்போது ஓடிடி ரிலீஸ்?: இது ஒருபக்கம் இருக்க திரையரங்குக்கு செல்ல விருப்பப்படாதவர்கள் இட்லி கடை எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற ஆவலோடு இருக்கிறார்கள். இந்நிலையில் அதுகுறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி 45 கோடி ரூபாய் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியிருப்பதாகவும்; இப்போது தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க தொடங்கியிருப்பதால் நவம்பர்வரை தியேட்டரில் ஓடவிட்டு; பிறகு ஓடிடியில் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











