சீதா ராமம் ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு: காத்திருக்கும் துல்கர் சல்மான் ரசிகர்கள்

ஐதராபாத்: துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடித்த சீதா ராமம், ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஹனு ராகவபுடி இயக்கியிருந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் தரமான வசூலை நிகழ்த்திக் காட்டியது சீதா ராமம் திரைப்படம்.

எதிர்பாராமல் அடித்த சூப்பர் ஹிட்

எதிர்பாராமல் அடித்த சூப்பர் ஹிட்

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தை, ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். காதல் திரைப்படமாக உருவாகியிருந்த சீதா ராமம், யாருமே எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது. ராணுவ வீரர் கேரக்டரில் துல்கர் சல்மானும், அவரது காதலியாக மிருணாள் தாகூரும் நடித்திருந்தனர். ராஷ்மிகா மந்தனா மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸில் செம்ம வசூல்

பாக்ஸ் ஆபிஸில் செம்ம வசூல்

ராணுவ வீரரான துல்கர் சல்மானுக்கு சீதா என்பவரிடம் இருந்து வரும் காதல் கடிதங்களும், அதனால் ஏற்படும் திருப்பங்களையும் பின்னணியாக வைத்து ஹனு ராகவபுடி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க மென்மையான காதல் காவியமாக வெளியாகி சக்கைப்போடு போட்டது சீதா ராமம். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம், கடந்த ஒரு மாதத்தில் உலம் முழுவதும் சுமார் 90 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. இது படக்குழுவினரே எதிர்பாராத வசூல் என சொல்லப்படுகிறது.

ஓடிடியில் வெளியாகும் சீதா ராமம்

ஓடிடியில் வெளியாகும் சீதா ராமம்

இன்னும் சில திரையரங்குகளில் திரையிடப்படும் சீதா ராமம் படம், ஓடிடியில் வெளியாகிறது. அதன்படி, நாளை (செப்.9) அமேசான் ப்ரைம் ஓடிடியில் சீதா ராமம் திரைப்படம் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களை வசீகரித்த சீதா ராமம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துல்கர் சல்மான் உள்ளிட்ட சீதா ராமம் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உச்சத்தில் துல்கர் சல்மான் மார்க்கெட்

உச்சத்தில் துல்கர் சல்மான் மார்க்கெட்

சீதா ராமம் படத்தின் வெற்றியால் துல்கர் சல்மானின் மார்க்கெட் செம்ம உச்சத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் ஆகியோருக்கும் தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிக வாய்புகள் வந்தவண்ணம் உள்ளன. மேலும், சீதா ராமம் படத்தின் இரண்டம் பாகம் வெளியாகுமா என ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X