சனி-ஞாயிறு விடுமுறை தினத்தை அனுபவிக்க..ஓடிடி, திரையரங்கில் வெளியான உங்களுக்கான படங்கள்
சென்னை: இன்றும் நாளையும் விடுமுறையை அனுபவிக்க ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியான திரப்படங்கள், வெப் சீரீஸ்கள் உங்களுக்காக.
தமிழில் நித்தம் ஒரு வானம், காஃபி வித் காதல், லவ் டுடே என 3 படங்கள் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள், பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

3 புதிய படங்கள் திரையரங்கில்- நித்தம் ஒரு வானம்
தீபாவளிக்கு நானே வருவேன், சர்தார் இரண்டு படங்களும் திரையரங்கில் வெளியான நிலையில் நேற்று திரையரங்கில் மூன்று படங்கள் வெளியானது. அதில் ஒரு படம் நித்தம் ஒரு வானம். நடிகர்கள்: அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா நடித்த இப்படம் கோபி சுந்தர் இசையில், ரா. கார்த்திக் இயக்கியுள்ளார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.

லவ் டுடே
அடுத்து வெளியாகியுள்ள படம் லவ் டுடே. கோமாளி படம் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கியுள்ளதோடு அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். சிறிய குறும்படமாக வெளி வந்த லவ்டுடே திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. அவருடன் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜய் படத்தின் பெயரில் வந்துள்ள லவ் டுடே திரையரங்கில் ஓடுகிறது.

காஃபி வித் காதல் கலக்கல் மசாலா படம்
மூன்றாவது படமாக காஃபி வித் காதல் படம் வெளியாகியுள்ளது. ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், அம்ரிதா அய்யர், மாளவிகா, ரைசா வில்சன், டிடி நீலகண்டன், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன் நட்புக்காக ஆர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம். மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் எல்லா டப்பிங்கையும் முடிந்தப்பின் மறைந்தார். பிரதாப் போத்தனின் மகன்களாக ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் ஜெய் நடித்துள்ளனர். மகளாக டிடி நீலகண்டனும் போனிலேயே அவர் குடும்பம் நடத்த கிளைமேக்ஸில் ஒரு சாக்லேட் பாய் ஹீரோ சிறப்பு கேமியோ கொடுக்கிறார். கலகலவென மசாலா கலந்து போகும் படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.

ஒடிடியில் பொன்னியின் செல்வன்
உங்கள் ஓய்வு நேரத்தை வீட்டிலிருந்தே கழிக்க ஓடிடி தளத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பட் ஹிட் அடித்து ரூ.450 கோடியை அள்ளிய பொன்னியின் செல்வன் ஓடிடியில் அமேசான் பிரைமில் ரிலீசாகியுள்ளது. இது தவிர ஜாலியாக பார்க்க தனுஷின் திருச்சிற்றம்பலம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் , நானே வருவேன் திரைப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படமும் 100 நாட்களை நோக்கி நகரும் நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. நீங்களும் ரசிக்கலாம். வெற்றிமாறனின் பேட்டக்காளி ஆஹா ஓடிடி தளத்தில் மூன்றாவது எபிசோடு வந்துள்ளது.

ஓடிடியில் 3 மலையாள படங்கள்
இதுதவிர மலையாளத்தில் புது வரவுகளாக ஓடிடி தளத்தில் ஆசிப் அலியின் கொத்து அமேசான் பிரைமிலும், மலையாளத்தில் வெளியாகியுள்ள பந்த்ரண்டு படம் அமேசான் பிரைமில் உள்ளது. இது தவிர 'மைக்' மலையாளப்படமும் பிரைமில் உள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிரம்மாஸ்த்ரா படம் வெளியாகியுள்ளது. இது தவிர பிம்பிசாரா ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது. இவை தவிர தட்கா ( இந்திபடம்) அமர்பாலி (பெங்காலி) ஜி.5 -ஓடிடி தளத்தில் உள்ளது. இந்தி ரசிகர்களுக்காக அக்ஷய குமாரின் ரக்ஷா பந்தன் படம் ஜீ.5 தளத்தில் வெளியாகியுள்ளது.

ஓடிடியில் நாகார்ஜுனாவின் தி கோஸ்ட்
ஐஸ்வர்யா லக்ஷுமி நடித்து கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகியுள்ள அம்மு படம் ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. சோனி லைவில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகும் கையும் களவும் வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. ஆர்.பார்த்திபனின் இரவின் நிழல் படம் அமேசான் பிரைமிலும் வெளியாகியுள்ளது. இது தவிர நெட்ஃபிலிக்ஸில் நாகார்ஜுனாவின் 'ரக்ஷன் தி கோஸ்ட்' தமிழ் தெலுங்கில் வெளியாகியுள்ளது. எமலா ஹோம்ஸ் 2 வெப் சீரிஸும் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ளது. அனிமேஷன் படமான மினியன்ஸ் 2 ரைஸ் ஆஃப் க்ரு அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. குழந்தைகள் கண்டுகளிக்கலாம்.


Click it and Unblock the Notifications











