twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லவ் டுடே முதல் ஏகே 62 வரை… தமிழ்ப் படங்களை தட்டித் தூக்கும் நெட்பிளிக்ஸ்… காரணம் இதுதானா?

    |

    சென்னை: கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் மீண்டும் திரைத்துறையின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    பலரின் கணிப்புகளை பொய்யாக்கி ஏராளமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து வருகின்றன.

    அதேபோல், தியேட்டர் ரிலீஸுக்குப் பிந்தையை ஓடிடி ரைட்ஸுக்கும் இங்கே பயங்கரமான போட்டிகள் காணப்படுகிறது.

    வாரிசு தியேட்டர் ரைட்ஸ்… துணிவுக்குப் போட்டியாக களமிறங்கிய தயாரிப்பு நிறுவனம்… இனி தெறிமாஸ் தான்!வாரிசு தியேட்டர் ரைட்ஸ்… துணிவுக்குப் போட்டியாக களமிறங்கிய தயாரிப்பு நிறுவனம்… இனி தெறிமாஸ் தான்!

    கோலிவுட்டை குறிவைக்கும் நெட்பிளிக்ஸ்

    கோலிவுட்டை குறிவைக்கும் நெட்பிளிக்ஸ்

    கொரோனா ஊரடங்கின் போது சினிமா ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற ஓடிடி தளங்கள், இன்று இந்தியாவில் மிக ஆழமாக காலூன்றியுள்ளன. உலகளவில் மிகவும் பிரபலமான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் தளங்கள், தமிழ்ப் படங்கள் வாங்குவதில் போட்டிப் போட்டு செயல்படுகின்றன. இந்நிலையில், முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், அடுத்தடுத்து பல முக்கியமான தமிழ்ப் படங்களின் ரைட்ஸை வாங்கியுள்ளது. இந்த வரிசையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'லவ் டுடே' திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகிறது.

    கலகத் தலைவன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

    கலகத் தலைவன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

    லவ் டுடே படத்தைத் தொடர்ந்து உதயநிதி நடித்துள்ள 'கலகத் தலைவன்' படமும் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், டிசம்பரில் ஓடிடியில் ஸ்டிரீமிங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அதர்வா நடிப்பில் கடந்த வாரம் தியேட்டர்களில் வெளியான பட்டத்து அரசன் படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. மேலும், டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படங்களின் உரிமையும் நெட்பிளிக்ஸ் வசமே உள்ளது.

    இறைவன் முதல் தங்கலான் வரை

    இறைவன் முதல் தங்கலான் வரை

    மேலும், ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் தான் கைப்பற்றியுள்ளது. முக்கியமாக பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் துணிவு படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் ஏற்கனவே வாங்கிவிட்டது. மேலும், உதயநிதியின் 'மாமன்னன்' ஓடிடி உரிமையும் நெட்பிளிக்ஸ் வசம் சென்றுவிட்டது. அதேபோல், ராகவா லாரன்ஸ், வடிவேலு நடித்து வரும் 'சந்திரமுகி 2', விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' ஆகிய படங்களின் ஓடிடி உரிமையும் நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தளபதி 67, ஏகே 62

    தளபதி 67, ஏகே 62

    இறைவன், மாமன்னன், சந்திரமுகி 2, தங்கலான் ஆகிய படங்கள் இன்னும் படப்பிடிப்பும் முடியவில்லை, தியேட்டர் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவிக்கவில்லை. ஆனாலும், அந்தப் படங்களையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. முக்கியமாக இன்னும் படப்பிடிப்பே தொடங்காத விஜய்யின் தளபதி 67 பட ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் கோடிகணக்கில் பணத்தை கொட்டி வாங்கியுள்ளது. அதேபோல், அஜித்தின் 'ஏகே 62' படத்தின் அடுத்தக்கட்ட அறிவிப்புகளே இன்னும் வெளியாகாத நிலையில், அதன் ஓடிடி ரைட்ஸையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. சின்ன பட்ஜெட் முதல் மெகா பட்ஜெட் படங்கள் என வெரைட்டியாக நெட்பிளிக்ஸ் கைவசம் வைத்துள்ளதால், அதன் சந்தாதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    English summary
    Popular OTT platform Netflix is acquiring the rights to important Tamil films. It has bought many films like Love Today, Kalaga Thalaivan, Gatta Kusthi, Naai Sekar Returns, Thunivu, Maamannan, Chandramukhi 2, Thangalaan, Thalapathy 67, and AK 62.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X