கேம் ஆஃப் த்ரோன்ஸ்-க்கு 200 வருட முந்தைய கதையாம்.. ஹவுஸ் ஆஃப் தி டிராகன் டீசர் எப்படி இருக்கு?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹெச்பிஓ தயாரித்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக போகிறது ஹவுஸ் ஆப் தி டிராகன் வெப்சீரிஸ்.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக ஒளிபரப்பான கேம் ஆஃப் தி த்ரோன்ஸ் வெப்சீரிஸ் ஏகப்பட்ட விருதுகளை குவித்து உலகளவில் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளது.
இந்நிலையில், கேம் ஆஃப் தி த்ரோன்ஸ் கதை ஆரம்பிப்பதற்கு முன்னதாக 200 ஆண்டுகளுக்கு முன்பே டார்கேரியர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது, அவர்களுடன் ஒன்றிப் பிணைந்து இருந்த டிராகனின் வாழ்க்கையையும் இந்த வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்ட வருகிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
ஹாலிவுட் படங்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸ் உலகளவில் பல கோடி ரசிகர்களை ஈர்த்துள்ளது. அந்த வெப்சீரிஸ் முடிந்ததும், அவ்வளவு தானா? இனி டிராகன்களையும் அந்த இரும்பு சிம்மாசனத்தையும் பார்க்க முடியாதா? என ஏங்கிய ரசிகர்களுக்கு ஹவுஸ் ஆஃப் தி டிராகன் வெப்சீரிஸ் மூலம் உற்சாகத்தை கொடுக்க முடிவு செய்துள்ளது ஹெச்பிஓ.

ஹவுஸ் ஆஃப் டிராகன்
ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின் எழுதிய ஃபயர் அண்ட் பிளட் நாவலை தழுவி இந்த வெப்சீரிஸை ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் மற்றும் ரியான் ஜே. கொண்டல் இருவரும் உருவாக்கி உள்ளனர். ஹெச்பிஓ தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஆகஸ்ட் 22ம் தேத் முதல் வெளியாக காத்திருக்கிறது. தற்போது அந்த அறிவிப்புடன் அட்டகாசமான டிரைலர் வெளியாகி இருக்கிறது.

டிராகன்ஸ் ஆர் கம்மிங்
தி ஈகிள் இஸ் கம்மிங் என விக்ரம் படத்தில் பாடல் வந்ததை போல டிராகன்ஸ் ஆர் கம்மிங் என போட்டு அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பேடி கான்சிடைன், எம்மா டி ஆர்சி, மேட் ஸ்மித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர். டிராகன்களின் ஆட்டம் இந்த வெப்சீரிஸில் ரொம்ப அதிகமாகவே இருக்கும் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.
நிர்வாணக் காட்சிகள்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸில் எந்த அளவுக்கு பிரம்மாண்டமான கதை, மிரட்டலான டிராகன்கள் இருந்ததோ அதே அளவுக்கு நிர்வாணக் காட்சிகள் கொட்டிக் கிடந்தன. இந்த டிரைலரிலும், ஒரே ஒரு ஆடை அவிழ்ப்பு சீனை மட்டும் கட் செய்து வைத்திருந்தாலும், ஏகப்பட்ட நிர்வாணக் காட்சிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகஸ்ட் 22ம் தேதிக்கு மேல் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு செம விருந்து காத்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











