இளையராஜா கொடுத்த குடைச்சல்.. மொத்த பாட்டையும் நீக்கிய படக்குழு.. மீண்டும் ஓடிடியில் குட் பேட் அக்லி

சென்னை: இளையராஜா தொடர்ந்த வழக்கால் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்ட 'குட் பேட் அக்லி' திரைப்படம் மீண்டும் ஓடிடியில் சில மாற்றங்களுன் வெளியாகி உள்ளது. படத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் புதிதாக இசையமைத்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாது. இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில், சிம்ரன் என பலர் நடித்திருந்தனர். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை ரசித்து ரசித்து எடுத்து இருந்தால், படத்தில் அஜித் ஸ்லிம் ஆன தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி மற்றும் இளமை இதோ இதோ உள்ளிட்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

குட் பேட் அக்லி: இந்தப் பாடல்களை தனது அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பிலிருந்து 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இளையராஜா சார்பில் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தின் மீது காப்பி ரைட் மீறல் சட்டத்தின் கீழ் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார். இதற்கிடையே இந்தப் திரைப்படம் கடந்த மே மாதம் 8ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

Ajith Good Bad Ugly Netflix
Photo Credit:

மீண்டும் ஓடிடியில்: சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவின் வழக்கை முன்வைத்து, 'குட் பேட் அக்லி' படத்தினை ஓடிடி தளத்திலிருந்து நீக்கியது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி உருவானது. தற்போது மீண்டும் சில மாற்றங்களுடன் 'குட் பேட் அக்லி' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜா பாடல்கள் அனைத்தையும் படக்குழு நீக்கிவிட்டது. அந்த பாடல்கள் நீக்கப்பட்ட காட்சிக்கு புதிதாக ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையமைத்திருக்கிறார். அர்ஜுன் தாஸ் நடனமாடும் 'ஒத்த ரூபாயும்' பாடல் முழுமையாக நீக்கப்பட்டு, அதில் பாடலாக அல்லாமல் புதிதாக பின்னணி சேர்க்கப்பட்டு இருக்கிறது. 'குட் பேட் அக்லி' விவகாரம் தொடர்பாக இளையராஜா தரப்பிலிருந்து செப்டம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, படக்குழுவினரே பாடலை நீக்கி மீண்டும் படத்தினை பதிவேற்றி இருக்கிறது. இதனால் இந்த சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்குவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X