குள்ளமான கணவர்.. தினமும் படாத பாடுபடும் அழகான மனைவி.. 916 குஞ்ஞூட்டன் பட விமர்சனம்!
சென்னை: திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்த கின்னஸ் பக்ருவின் பரபரப்பான "916 குஞ்ஞூட்டன்" திரைப்படம் தற்போது OTT தளத்தில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்கள், இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் வீட்டிலிருந்தபடியே பார்த்து ரசிக்கலாம் இத்திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
"916 குஞ்ஞூட்டன்" படத்தை ஆரியன் விஜய் இயக்கி உள்ளர். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இப்படத்தில், டினி டாம், ராகேஷ் சுப்ரமணியன், டயானா ஹமீது ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மோர்ஸ் டிராகன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இத்திரைப்படம், எதிர்பாராத திருப்பங்களுடன் சஸ்பென்ஸ் நிறைந்த திடீர் திருப்பங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது.

916 குஞ்ஞூட்டன் : படத்தின் ஹீரோவா பக்ரு மிகவும் குள்ளமானவராக இருக்கிறார். இவருக்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டும் என பெற்றோர் ஆசைப்படுகின்றனர். பல இடத்தில் பெண் தேடியும் இவருக்கு திருமணமே நடக்கவில்லை. அழகான பெண் ஒருவர் இவரை திருமணம் செய்து கொள்ள முன் வருகிறாள். பக்ருவும் மனசு நிறைய ஆசையுடன் அந்த அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். முதல் இரவு அறையில், பக்ருவிற்கு தனது மனைவி வைஷ்ணவிக்காக அவர் காத்து இருக்கிறார். அந்த நேரம் பார்த்து, சைஷ்ணாவின் தாத்தாவிற்கு உடல் நலம் முடியாமல் போக, அனைவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். வைஷ்ணவியின் தாத்தா மீது பிரியம் என்பதால் முதலிரவையும் தவிர்த்து விட்டு, தாத்தாவுடன் இரவு முழுக்க மருத்துவமனையிலேயே இருக்கிறாள். ஏகப்பட்ட கனவுடன் மனைவிக்காக காத்திருந்த பக்ருவிற்கு முதலிரவு நடக்காததால் வருத்தமடைகிறான்.
படத்தின் கதை : இங்கு இருந்தால் முதல் இரவு நடக்காது என, முடிவு செய்யும் ஹீரோ தன்னுடைய மனைவி வைஷ்ணவியை அழைத்துக்கொண்டு அண்ணன் வீட்டிற்கு செல்கிறான். அங்கு தனது ஆசையை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறான். ஆனால், வைஷ்ணவி நமக்குள் இப்போது எதுவுமே வேண்டாம் என்று சொல்ல, என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறான் பக்ரு, இதைப்பற்றிய, தனது நண்பனிடம் சொல்ல, புருஷன் என்பவன் மனைவியை அடைக்க வைக்க வேண்டும், நீ இப்படியே அவள் விருப்பத்திற்கு விட்டால், அவள் கையை மீறி போய்விடுவாள் என்று சொல்ல, நண்பர் கொடுக்கும் தவறான ஐடியாவால், அன்று இரவு முரட்டுத்தனமாக வரம்பை மீறி அரக்கன் போல தனது மனைவி வைஷ்ணவியிடம் நடந்து கொள்கிறான் பக்ரு. இதனால் ஆத்திரப்படும் வைஷ்ணவி கத்தி அழுது கூப்பாடு போட்டு, தனது வாழ்க்கையில் நடந்த சில கோரமான விஷயத்தை சொல்லி விட்டு இதற்கு மேல் உன்னுடன் வாழ மாட்டேன் என்று சென்றுவிடுகிறாள். அப்படி வைஷ்ணவியின் வாழ்க்கையில் என்ன நடந்தது.. கணவன் மனைவி இருவரும் சேர்ந்தார்களா இல்லையா.. என்பது தான் "916 குஞ்ஞூட்டன்" படத்தின் கதை.
ஓடிடியில்: மே மாதம் தியேட்டரில் வெளியான இப்படம் நல்ல வசூலை அள்ளி பாராட்டை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் ஜூலை 11ந் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. ஓடிடியில் வெளியான "916 குஞ்ஞூட்டன்" படத்தை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான படத்தை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இந்த படத்தை ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











