For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெப் சீரிஸுக்காக டைட்டில் பாடல் பாடிய ஜி.வி.பிரகாஷ்..அடுத்த ஹிட் ரெடி !

  |

  சென்னை : மாணவியின் படிப்பு செலவுக்காக வெப் சீரிஸுக்கு டைட்டில் பாடல் ஒன்றை பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

  திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

  'மோஷன் கன்டென்ட் குரூப்' வழங்கும் வெப் சீரிஸ் தான் 'ஆதலினால் காதல் செய்வீர்'. இதில் பல புது கலைஞர்கள் புது முயற்சி எடுத்து சாதிக்க துடிக்கும் திறமைசாலிகளை பயன்படுத்தி இந்த பாடலைகளை வடிவமைத்து உள்ளனர்

  முதல் காதல், திருமணத்துடன் தொடர்கிறது… 7 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கன்னிகா !முதல் காதல், திருமணத்துடன் தொடர்கிறது… 7 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கன்னிகா !

  ஜிவி ஹிட்ஸ்

  ஜிவி ஹிட்ஸ்

  ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டும் அல்லாமல் ஒரு நடிகராகவும் ,பாடகராகவும் பல திறமைகளை கொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் .குசேலன் ,தலைவா போன்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் தனது நடிப்பை துவங்கிய இவர் ,டார்லிங் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

  அசத்தல் நடிப்பு

  அசத்தல் நடிப்பு

  கடவுள் இருக்கான் குமாரு,நாச்சியார்,திரிஷா இல்லனா நயன்தாரா ,சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது .நடிப்புத்திறமை ஒருபக்கம் இருக்க இவரது இசைக்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது.2006ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் படத்தில் தொடங்கி சூரரை போற்று படம் வரை இவரது இசைக்கு பலரும் அடிமை என்றே சொல்லலாம் .

  காட்டு பயலே

  காட்டு பயலே

  சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்தில் காட்டு பயலே பாடல் இவரது வெற்றிக்கு ஒரு உதாரணம் .யூட்யூப்பின் சாதனை லிஸ்டில் இந்த பாடலும் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  வெப் சீரிஸ்

  வெப் சீரிஸ்

  சமீப காலமாகவே வெப் தொடர்கள் ,அந்தோலஜி என்று புது புது யுக்தியை திரைத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.ரசிகர்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும் .வெப் தொடர்கள் எபிசோடு வாரியாக இருப்பதால் பார்ப்பவர்களுக்கு எளிதாகவும் இருப்பதனால் அதன் மேல் ஆர்வம் அதிகமாக உள்ளது.

  கால் பதித்த ஜீவி

  கால் பதித்த ஜீவி

  இது வரை படங்களுக்கு இசையமைத்து பாடல் பாடிவந்த ஜிவி புது முயற்சியாக டெய்லி சீரிஸ் டைட்டில் பாடலை பாடியுள்ளார்.இந்த புது முயற்சியை செய்ததனால் தற்போது அனைவரின் பார்வையும் இவரின் மேல் விழத்தொடங்கியுள்ளது.

  புது அனுபவம்

  புது அனுபவம்

  "ஆதலினால் காதல் செய்வீர்" டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலை பாடுவது ஜி.வி.பிரகாஷின் கேரியரில் மட்டுமல்ல, வெப் சீரிஸ் வரலாற்றிலேயே இது ஒரு மிக சிறந்த உதாரணம் .

  ஆதலினால் காதல் செய்வீர்

  ஆதலினால் காதல் செய்வீர்

  "'ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே! ஹே நண்பா... கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே.." - என்கிற உற்சாக துள்ளலுடன் கூடிய இந்த பாடலை நித்திஷ் எழுத, மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிற 'ஆதலினால் காதல் செய்வீர்' ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ்.

  மாணவிக்கு உதவி

  மாணவிக்கு உதவி

  'இந்தப் பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே ஒதுக்கி விடுவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியது தான் இதில் ஹைலைட்.இந்த 'ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி யூ டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

  தலைவி வெயிட்டிங்

  தலைவி வெயிட்டிங்

  தற்போது இவரது இசையில் வெளிவர மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கும் படம் தான் தலைவி .திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போய் கொண்டே இருக்கின்றது .ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை என்பதால் அனைவரிடத்திலும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.இப்படத்தின் வெற்றிக்கு இவரது இசை துணை நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

  புதுப்படமும் தொடக்கம்

  புதுப்படமும் தொடக்கம்

  சீனு ராமசாமி இயக்கும் புதுப்படத்தில் ஜிவி நடிக்க உள்ளார் ,இப்படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டது .பூஜை போட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டது. ஒரு பக்கம் பூஜை , இன்னொரு பக்கம் பாடல் பதிவு , மற்றொரு பக்கம் இசை என்று பன்முகம் கொண்ட ஜீ வி தனக்கு கிடைக்கும் அத்தனை புது வாய்ப்புகளையும் மிகவும் மெனக்கெட்டு மெருகேற்றி சிறப்பு செய்கிறார் .

  அப்பாவாக தன் கடமையை

  அப்பாவாக தன் கடமையை

  ஜீ வி எவ்வளவு தான் பிஸி பிஸி என்று சொன்னாலும் தனது குடும்பத்துடன் செலவு செய்யும் நேரம், அதற்க்கு அவர் ஏற்படுத்தி கொள்ளும் குவாலிட்டி டைம் மிகவும் பாராட்ட தக்கது என்று சைந்தவி தான் சந்திக்கும் எல்லா நண்பர்களுடனும் சொல்லி வருகிறார் . குழந்தையுடன் செல்லமாக விளையாடுவது ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் தனது லட்சிய கனவு என்று தனது இலக்குகளை பட்டியல் இட்டு பக்காவாக பிளான் செய்து வருகிறார் ஜீவி

  Family Man 2 | Episode 02 review Tamil | Talking 2 Much | Filmibeat Tamil
  ஹிட் மாஜிக்

  ஹிட் மாஜிக்

  ஆல்பம் சாங் , டைட்டில் சாங் , சீரியல் சாங் , சினிமா சாங் , எத்தனை ரகங்கள் வந்தாலும் எத்தனை விதங்கள் தந்தாலும் ஜீ வி அதில் அத்தனையிலும் சிக்ஸர் அடித்து வெற்றி பெறுவது தான் அனைவரது ஆச்சிரியம் .ஜீ வி யின் பல பாடல்கள் மற்ற மொழிகளிலும் அதி பயங்கர ஹிட் அடிப்பது ஜீ வி செய்யும் மாஜிக். அந்த வகையில் ரீலீஸ் ஆகும் இந்த பாடலும் மிக பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று குழுவில் உள்ள அனைவரும் மிகவும் எதிர்பார்க்கின்றனர் .

  English summary
  Aathalinal Kaathal seiveer is the latest Web series from Motion Content Group. Music director GV Prakash has sung a song for this web series.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X