Don't Miss!
- Finance
ஒரு குரங்கு குல்லா 40000 ரூபாய்.. ஒரு ஸ்டிக்கர் மட்டும் தான் எக்ஸ்ட்ரா..!
- News
"கோல்டன்" வாய்ப்பு.. அந்த 8 மணி நேரம் என்ன நடந்தது? டெல்லியில் திமுகவின் மூவ்.. ஒரே குழப்பம்!
- Sports
"கோலி கொடுத்த ஐடியா தான் அது" கடைசி ஓவரில் பிரேஸ்வெல்லை வீழ்த்தியது எப்படி.. ஷர்துல் சுவாரஸ்ய தகவல்
- Lifestyle
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கர்ப்பத்திற்கு பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா?
- Automobiles
இனி புதுசா வரப்போற கார் எதுலயும் இந்த பிரேக் இருக்காது! சென்னை நிறுவனம் வேற லெவல்ல ஒன்ன தயாரிச்சிருக்காங்க!
- Technology
நோக்கியா, மோட்டோரோலா பீச்சர் போன்களுக்கு தள்ளுபடி அறிவித்த அமேசான்: மிஸ் பண்ணாதிங்க, வாங்கிருங்க!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
- Travel
பாண்டிச்சேரியில் தொடங்கப்படும் பாராகிளைடிங் – இனி பாராசூட்டில் பயணிக்க வெளி மாநிலங்களுக்கு செல்ல தேவை இல்லை!
நயன்தாராவை முந்துகிறாரா ஹன்சிகா.. ஓடிடியில் விரைவில் வெளியாகும் திருமண வீடியோ.. புதிய ப்ரோமோ!
சென்னை: நடிகை ஹன்சிகா தொழிலதிபரை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்த நிலையில், அவரது திருமண வீடியோ ஓடிடி தளத்தில் விரைவில் வரவுள்ளதாக புதிய ப்ரோமோ வீடியோவை ஹன்சிகா தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகைகளின் திருமணங்கள் சமீப காலமாக ஓடிடி பிசினஸாக மாறிவிட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
முன்னதாக நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த வீடியோ வெளியாகவில்லை.
புதிய கலர்புல் புகைப்படங்களை பகிர்ந்த ஹன்சிகா மோத்வானி.. க்யூட் என ரசிகர்கள் கமெண்ட்!

ஹன்சிகா திருமணம்
ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா எனும் 450 வருட பழமை வாய்ந்த அரண்மனையில் நடிகை ஹன்சிகா மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

தோழியின் கணவர்
நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொண்ட சோஹைல் கதூரியாவுக்கு ஏற்கனவே ஹன்சிகாவின் தோழியுடன் 6 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றதாகவும் அந்த திருமணத்திலேயே நடிகை ஹன்சிகா நடனம் ஆடிய வீடியோக்களையும் நெட்டிசன்கள் ஷேர் செய்து ஹன்சிகாவை கலாய்த்தனர். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் நடிகை ஹன்சிகா சோஹேல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார்.

ஓடிடியில் விரைவில்
நடிகை ஹன்சிகாவின் திருமணக் காட்சிகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ளதாக ஹன்சிகா தற்போது ஒரு புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளார். #HansikasLoveShaadiDrama எனும் டைட்டிலில் இந்த திருமண வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. பல கோடிகளுக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்த திருமண வீடியோவை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்னாது டிராமாவா
ஹன்சிகா லவ் ஷாதி டிராமா என அந்த திருமண வீடியோவுக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ப்ரோமோ வீடியோவில் டிராமா எனும் பெயரை மட்டும் சொல்ல மாட்டேன் என செம டிராமா போடுகிறார் நடிகை ஹன்சிகா. ஓடிடியில் விரைவில் திருமண வீடியோ வெளியாக உள்ள நிலையில், என்ன தொடர்ந்து நடிகைகள் எல்லாம் திருமணங்களையும் பிசினஸாக பார்க்கின்றனர் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

நயன்தாராவை முந்தும் ஹன்சிகா
ஜூன் 9ம் தேதி ஊர் அறிய திருமணம் செய்த நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெகு நாட்கள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாவதற்கு முன்னதாக அடுத்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு ஹன்சிகாவின் திருமண வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.