This Week OTT Release - ஓடிடி திருவிழா.. என்னென்ன படங்கள் ரிலீஸாகியிருக்கு பாருங்க.. செம ஜாலிதான்
சென்னை: ஓடிடியில் படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு ஒருவிதத்தில் வசதியாகத்தான் இருக்கிறது. தியேட்டர்களுக்கு குடும்பத்தோடு சென்றால் பணம் அதிகம் செலவாகும் என்பதால்; ஓடிடியில் ரிலீஸாகும்வரை காத்திருந்து படங்களை வீட்டில் இருந்தபடியே பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் என்னென்ன தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸாகியிருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
தியேட்டர்களில் வெளியாகும் படம் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் கழித்தாவது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சூழ்நிலை இருக்கிறது. அப்படி வெளியாகும் படங்களுக்காக வார கணக்கில் காத்திருக்க தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று அதிகம் பணம் செலவழிப்பதற்கு பதிலாக; அந்தப் பணத்தை ஓடிடிக்கு சந்தா கட்டினால் மாத கணக்கில் விருப்பப்பட்ட படத்தை பார்க்கலாம்.
அதிகரிக்கும் ஓடிடி கன்டென்ட்டுகள்: தியேட்டர்களில் ரிலீஸாகும் படங்கள் மட்டுமின்றி ஓடிடியில் மட்டும் ரிலீஸ் செய்வதற்காக படங்களும், வெப் சீரிஸ்களும் எடுக்கப்படுகின்றன. வெற்றிமாறன் உள்ளிட்டோர் எல்லாம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்கு என்றே கதையையும் எழுதியிருக்கிறார்கள். அதிலும் வெப் சீரிஸ்களின் பக்கம் ரசிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் கவனம் அதிக அளவு திரும்பியிருப்பதை பார்க்க முடிகிறது.

தலைவன் தலைவி: வாரா வாரம் ஓடிடியில் படங்கள் ரிலீஸாவது வழக்கம். அந்தவகையில் இந்த வாரமும் ஓடிடியில் படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. அந்தவகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், சரவணன், காளி வெங்கட், மைனா நந்தினி, யோகி பாபு, தீபா உள்ளிட்டோர் நடித்த தலைவன் தலைவி படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்ற நிலையில்; தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது.
வடிவேலு, ஃபகத் பாசில் நடித்த மாரீசன்: அதேபோல் வடிவேலு, ஃபகத் பாசில், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்த மாரீசன் திரைப்படமும் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. ஏற்கனவே இரண்டு பேரும் சேர்ந்து நடித்த மாமன்னன் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அந்தவரிசையில் மாரீசன் படமும் இடம்பெற்றிருக்கிறது. வடிவேலுவின் நடிப்பு ஏகத்துக்கும் கொண்டாடப்பட்ட நிலையில்; அந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.
தங்கர் பச்சான் மகனின் பேரன்பும் பெருங்கோபமும்: தமிழ் சினிமாவில் முக்கியமான ஒளிப்பதிவாளர்கள் மற்றும் இயக்குநர்களில் ஒருவர் தங்கர்பச்சான். இவரது மகன் விஜித் பச்சான் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம்தான் பேரன்பும் பெருங்கோபமும். சிவபிரகாஷ் என்பவர் இந்தப் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். ஓரளவுக்கு எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் தியேட்டர்களில் முறையான வரவேற்பை பெறவில்லை. தற்போது அந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. ஓடிடியிலாவது படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்குமா என்ற ஆவல் படக்குழுவினரிடம் எழுந்திருக்கிறது.
மற்ற மொழி படங்கள்: தமிழ் தவிர்த்து தெலுங்கில் வெளியான ஹரிஹர வீரமல்லு, விர்ஜினி பாய்ஸ் ஆகிய படங்கள் அமேசானிலும், கூத்தப்பல்லிலோ ஒக்கப்புடு படம் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகின்றன.அதேபோல் மலையாள படமான சூத்ரவக்யம், கன்னடத்தில் வெளியான சஞ்சு வெட்ஸ் கீதா 2 படம் ஆகியவையும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகின்றன. பிறகு என்ன மக்கள் இந்த வீக்கெண்டை ஜாலியாக கொண்டாடும் சூழ்நிலை உருவாகியிருகிறது.


Click it and Unblock the Notifications











