ஓடிடி.,க்கு வரும் அடுத்த பிரம்மாண்ட படம்... ஆர்ஆர்ஆர் எப்போ, எதில் ரிலீஸ் தெரியுமா?
சென்னை : தியேட்டர்களை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் ஓடிடி.,யிலும் வெளியிடப்பட உள்ளது. இது பற்றிய அப்டேட்கள் தற்போது வெளியாக துவங்கி விட்டன. அடுத்த பெரிய படங்கள் ஓடிடி.,க்க வர தயாராகி வருவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஆர்ஆர்ஆர். ரசிகர்களின் மிகுந்த ஆதரவை பெற்றுள்ள இந்த படம் பல படங்களின் வசூல் சாதனையை முதல் நாளிலேயே முறியடித்துள்ளது. அனைத்து தரப்பிலும் பாசிடிவ் விமர்சனங்களையே ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது.

பலமுறை தள்ளிப் போன ரிலீஸ்
ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி வெர்ஷன்கள் ஜீ 5 தளத்திலும், இந்தி, ஆங்கிலம், போர்ச்சுகீஸ், கொரியன், துர்கீஷ், ஸ்பானிஷ் ஆகிய மொழி வெர்ஷன்கள் நெட்ஃபிளிக்சிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளனவாம். தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட நான்கு வாரங்களுக்கு பிறகே ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் ஏப்ரல் 20 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளில் 223 கோடி வசூல்
ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25 ம் தேதி மிக பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட ஆர்ஆர்ஆர் படம் தான் மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்களிலேயே அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட படம். இந்த படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 223 கோடிகளை வசூல் செய்துள்ளது.

ஓடிடி ரிலீசிற்கும் தயார்
தியேட்டர்களில் மாஸ் வெற்றியை பெற்ற ஆர்ஆர்ஆர், ஓடிடி.,யில் எப்போது ரிலீஸ் செய்யப்படும், எந்த தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்பது தான் சோஷியல் மீடியாவில் முக்கிய பேச்சாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் ஓடிடி ரிலீஸ் பற்றிய மாஸ் பிளான் தற்போது வெளியாகி உள்ளது.

எந்த தளத்தில், எப்போ ரிலீஸ்
ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி வெர்சன்கள் ஜீ 5 தளத்திலும், இந்தி, ஆங்கிலம், போர்ச்சுகீஸ், கொரியன், துர்கீஷ், ஸ்பானிஷ் ஆகிய மொழி வெர்சன்கள் நெட்ஃபிளிக்சிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளனவாம். தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட நான்கு வாரங்களுக்கு பிறகே ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் ஏப்ரல் 20 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி கூட பிளான் இருக்கே
அதே சமயம் ஆர்ஆர்ஆர் படம் மே அல்லது ஜுன் மாதத்தில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்ஆர்ஆர் படத்தில் சேட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க் மற்றும் ஸ்டார் இந்தியா நெட்வொர்க் ஆகியன வாங்கி உள்ளன. இதனால் விரைவில் ஆர்ஆர்ஆர் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த நிறுவனங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











