Don't Miss!
- News
‛111’ போதாது.. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 புதிய பொறுப்பாளர்கள்.. டப் கொடுக்கும் எடப்பாடி-லிஸ்ட்
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஓடிடியில் வெளியான அருள்நிதியின் டைரி... ப்பா மிரட்டலான ஸ்னீக் பீக்.. பார்க்க ரெடியா மக்களே!
சென்னை : நடிகர் அருள் நிதி, அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு திரில்லர் படங்கள் சிறப்பாக செட் ஆகிறது.
இடையில் ஆக்ஷன் படங்களையும் கொடுத்து வரும் அருள்நிதியின் நடிப்பில், டி பிளாக், தேஜாவு படங்களை தொடர்ந்து டைரி படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த மூன்று படங்களும் த்ரில்லர் ஜானரில் வெளியான போதிலும் 3 படங்களும் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வெற்றியடைந்துள்ளன.
பொன்னியின் செல்வன் பிளாக் பஸ்டர் அடிக்கும்..டிரைலரை பார்த்து பாராட்டிய சூர்யா!

நடிகர் அருள் நிதி
நடிகர் அருள்நிதி தொடர்ந்து த்ரில்லர் வகை கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு இதுபோன்ற படங்கள் சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன. ஆக்ஷன் படங்களிலும் இடையில் நடித்தாலும் அதிலும் த்ரில்லர் கதைக்களம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் அருள்நிதி.

த்ரில்லர் படங்கள்
அவருக்கு இது போன்ற கதைகள் சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன. அவரது உடல்மொழியும் இதுபோன்ற கதைகளில் சிறப்பாக செயல்படுகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் அவரது படங்களை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் அவரது நடிப்பில் டி பிளாக், தேஜாவு படங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன.

டைரி படம்
இதனிடையே அருள் நிதி, காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள டைரி படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்டது. பவித்ரா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் கிஷோர் உள்ளிட்டவர்கள் அவருடன் இணைந்து நடித்திருந்தனர்.

மிரட்டலான பின்னணி இசை
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு எத்தன் யோஹன் மிரட்டலான இசையை கொடுத்துள்ளார். படத்தின் பின்னணி சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான விமர்சனம் + வசூல்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பான படங்களுக்கு இடையில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ராட்சசி பட இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் அருள்நிதி. அந்தப் படமும் த்ரில்லர் வகைப் படமா அல்லது ஜனரஞ்சகமான படமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஓடிடியில் வெளியீடு
இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் சூப்பர் ஹிட்டடித்த இந்தப் படம் ஓடிடியிலும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தின் பிரமோஷனாக படத்தின் மிரட்டலான ஸ்னீக் பீக் வெளியிடப்பட்டுள்ளது.