இன்கிரெடிபிள் வொர்க்.. சுழல் வெப்சீரிஸை பாராட்டிய இயக்குநர் ராஜமெளலி. மிரட்டலான மேக்கிங்!

சென்னை: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான சுழல் வெப்சீரிஸை ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

நடிகர் கதிர் தனது ட்விட்டர் ஐடியின் பெயரையே சக்கரை என மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் சுழல் வெப்சீரிஸை பாராட்டி போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

தலையை சுத்த வைக்கும் சுழல்

தலையை சுத்த வைக்கும் சுழல்

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இணைந்து எழுதிய இந்த கிரைம் மற்றும் சோஷியல் டிராமா அமேசான் பிரைமில் சுழல் எனும் வெப்சீரிஸ் ஆக வெளியாகி உள்ளது. பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 8 எபிசோடுகளை கொண்டு மொத்தமாக 6 மணி நேர நீண்ட படமாக அதுவும் அடுத்த அடுத்த எபிசோடுகளை தொடர்ந்து பார்க்கத் தூண்டும் விதமாக இந்த வெப்சிரீஸின் மேக்கிங் மிரட்டுகிறது.

என்ன கதை

என்ன கதை

ஒரு மலை கிராமத்தில் 9 நாள் கொண்ட மயான கொள்ளை திருவிழா ஆரம்பமாகிறது. அதன் முதல் நாளில் அந்த ஊரில் ஒரு சிமெண்ட் ஃபேக்டரி ஒன்று தீப்பிடித்து எரிகிறது. அதே நேரத்தில் ஒரு வயதுக்கு வந்த சிறுமி காணாமல் போகிறாள். இந்த இரண்டுக்கும் என்ன சம்பந்தம், இதை யார் செய்தார்கள் என பரபரப்பான விசாரணையுடன் நகரும் கிரைம் மற்றும் சோஷியல் மெசேஜ் டிராமா தான் இந்த சுழல்.

தனுஷ் ட்வீட்

தனுஷ் ட்வீட்

சுழல் வெப்சீரிஸ் வெளியான உடனே அதனை பார்த்து விட்டு நடிகர் தனுஷ் தனது பாராட்டுக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து இருந்தார். அமேஸிங்கான கிரைம் த்ரில்லர் என பாராட்டிய தனுஷ், இந்த வெப்சீரிஸில் கதாபாத்திரங்களாகவே மாறி வாழ்ந்த நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி மற்றும் திரைக்கதை எழுதிய புஷ்கர் மற்றும் காயத்ரியை குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்.

ராஜமெளலி பாராட்டு

ராஜமெளலி பாராட்டு

இந்நிலையில், சுழல் வெப்சீரிஸை பார்த்த இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்கிரெடிபிள் வொர்க்.. எப்படியொரு ரிஸ்க்கான அதே சமயம் தேவையான கருத்தை சொல்லி இருக்கீங்க என பாராட்டி உள்ளார். இயக்குநர் ராஜமெளலி ட்வீட்டுக்கு கீழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரொம்ப நன்றி சார் என கமெண்ட் போட்டுள்ளார்.

30 மொழிகளில்

30 மொழிகளில்

ரியல் பேன் வேர்ல்ட் படைப்பாக சுழல் மாறியுள்ளது. உலகில் உள்ள 30 மொழிகளில் இந்த சுழல் - The Vortex வெப்சீரிஸ் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. அனைத்து மொழிகளிலும் டப்பிங் கொடுத்த கலைஞர்கள் அட்டகாசமான வேலையை செய்துள்ளதாக பாராட்டி உள்ளனர். புரொடக்‌ஷன் வேல்யூ அதிகம் உள்ள இந்த வெப்சீரிஸ் ரசிகர்களை கடைசி வரை என்கேஜ் ஆக கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X