என்ன சொல்றீங்க வலிமை ஒடிடி ரிலீஸா? அதுதான் காரணமா? அஜித் ரசிகர்களை அப்செட் பண்ணிடாதீங்க!
சென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் ஒடிடியில் வெளியாக போவதாக பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வலிமை படத்தின் டிரைலர் எப்போ ரிலீஸாகும் என எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த வாரம் நிச்சயம் பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் வலிமை படத்தின் கதை தொடர்பாக ஏகப்பட்ட எக்ஸ்க்ளூசிவான தகவல்களை இயக்குநர் எச். வினோத் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி உள்ளார்.

வலிமை பொங்கல்
ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இரத்தம் ரணம் ரெளத்திரம் படம் வந்தாலும், பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் வந்தாலும் தமிழ்நாட்டில் நடிகர் அஜித் குமாரின் வலிமை படம் தான் வரும் பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடிக்கும் என அஜித் ரசிகர்கள் பெரிய சாதனையை நிகழ்த்த காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விரைவில் டிரைலர்
வலிமை படத்தின் க்ளிம்ஸ், வலிமை படத்தின் டீசர், வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ என ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், அடுத்ததாக வலிமை படத்தின் டிரைலரை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வாரத்திற்குள் வலிமை டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிடி ரிலீஸா
வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி தியேட்டர்களை தெறிக்க விடப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், வலிமை திரைப்படம் நேரடியாக ஒடிடியில் வெளியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கசிந்துள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நம்பிக்கையுடன் ரசிகர்கள்
யார் என்ன சொன்னாலும் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை வலிமை திரைப்படம் நிகழ்த்தும் என அஜித் ரசிகர்கள் ஒடிடியில் படம் வெளியாகாது என முழு நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும், ஒடிடியில் படத்தை வெளியிடக் கூடாது என தயாரிப்பு தரப்புக்கும் சமூக வலைதளங்கள் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஓமிக்ரான் தான் காரணமா?
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதி தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு பெருகி வரும் நிலையில், ஜனவரி மாதமே திரையரங்குகள் மூடப்படும் வாய்ப்புகள் அல்லது 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர், அஜித்தின் வலிமை மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் என அனைத்து பெரிய படங்களின் ரிலீஸுக்கும் சிக்கல் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது. ஒருவேளை திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டால் வலிமை படத்தை ஒடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











