என்னங்க சொல்றீங்க...வலிமை ஓடிடி.,யில் ரிலீஸ் ஆகிறதா?...இது எப்போ?

சென்னை : ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்திருப்பது அஜித் நடித்துள்ள வலிமை பட ரிலீசுக்காக தான். வலிமை ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. அடுத்த வாரம் வியாழக்கிழமை வலிமை டே ஆக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே உற்சாகமாகி விட்டனர். பேனர், போஸ்டர், சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் என அதகளப்படுத்தி வருகின்றனர்.

மூன்று ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வரும் அஜித் படம் என்பதாலும், தமிழக தியேட்டர்களில் 100 % பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு ரிலீசாக உள்ள முதல் பெரிய நடிகரின் பெரிய பட்ஜெட் படம் என்பதாலும் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது. படம் ரிலீசாவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையிலும் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியிட்டு அசத்தி வருகிறது படக்குழு.

வலிமை இசையமைப்பாளர் யுவன் இல்லையா

வலிமை இசையமைப்பாளர் யுவன் இல்லையா

ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாக கூறினார்கள். யுவனின் இசையில் டைரக்டர் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாக்கப்பட்ட ஃபஸ்ட் சிங்கிளான நாங்க வேற மாரி, செகண்ட் சிங்கிளான அம்மா பாடல் ஆகியன தாறு மாறாக ஹிட் அடித்தன. இந்நிலையில் புதிய தகவலாக இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மட்டும் இசையமைக்கவில்லையாம், ஜிப்ரானும் இணைந்து இசையமைத்துள்ளாராம்.

நான்கு நாட்கள் 4 மணி ஷோ

நான்கு நாட்கள் 4 மணி ஷோ

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ள வலிமை படத்தின் முதல் நாள் முதல் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. ரிலீஸ் நாளான பிப்ரவரி 24 மட்டுமின்றி, தொடர்ந்து 4 நாட்களுக்கு அதிகாலை 4 மணி ஷோ திரையிட அனுமதி பெற்றுள்ளார்களாம். தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 1000 தியேட்டர்களில் வலிமை ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

பட்டையை கிளப்பும் ப்ரீ ரிலீஸ் வியாபாரம்

பட்டையை கிளப்பும் ப்ரீ ரிலீஸ் வியாபாரம்

இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடும் வலிமை படத்திற்கு யுஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, பட்ஜெட் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான தொகையை பெற்றுள்ளது. படத்தில் காது கிழியும் அளவிற்கு அதிரடி ஆக்ஷன்கள் வேற லெவல் மாசாக இருக்க போவதாக படத்தை பார்த்த பிரபலங்கள் தெரிவித்துள்ளதால் வலிமை படம் எப்போது ரிலீசாகும் என அனைவரும் காத்திருக்கிறார்கள்.

என்னது வலிமை ஓடிடி ரிலீசா

என்னது வலிமை ஓடிடி ரிலீசா

இந்நிலையில் வலிமை படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஆனால் தியேட்டரில் வெளியிடப்பட்ட பிறகே ஓடிடி.,யில் வெளியிடப்பட உள்ளதாம். பிப்ரவரி 24 ம் தேதி தியேட்டரிலும், ஏப்ரல் 14 ம் தேதி ஓடிடி.,யிலும் வலிமை படம் ரிலீசாக உள்ளதாம். வலிமை படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஜீ நிறுவனம் தான் வாங்கி உள்ளது. இதனால் ஜீ ஓடிடி தளத்தில் தான் வலிமை ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X