Mask OTT: கவின், ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா?

சென்னை: தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக்ஷன் கம்பனி' மற்றும் 'பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் ஒரு டார்க் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது. கவின், ஆண்ட்ரியா நடித்த 'மாஸ்க்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரையில் ஹீரோவாக நடித்து வந்தவர் கவின். பின்னர், பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுத்தார். பிக்பாஸ் கலந்து கொண்ட இவருக்கு ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனம் வந்தன. அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியுடன் வெளியேறிய கவின். லிப்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். அந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. அந்த படத்தை அதனை தொடர்ந்து, டாடா படத்தில் கல்லூரி மாணவனாக, அப்பாவாக நடித்து அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார்.

Kavin Andrea Jeremiah Mask OTT
Photo Credit:

மாஸ்க் திரைப்படம்: அதன் பின் வெளியான ஸ்டார் திரைப்படம் வெற்றி பெற்றதாலும், அடுத்தடுத்து வெளியான பிளடி பெக்கர், கிஸ் என தொடர்ந்து கவினுக்கு படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது கவின், ஆண்ட்ரியா ஜெரமையா, ருஹாணி ஷர்மா, சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்க். இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து முதல் சிங்கிளான 'கண்ணு முழி', பாடல் வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்றது. இயக்குநர் விகர்ணன் அசோக், இயக்குநர் வெற்றி மாறன் அவர்களின் வழிகாட்டுதலில் பெயரில் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் RD ராஜசேகர் ஒளிப்பதிவு, R. ராமர் படத்தொகுப்பு, ஜாக்கி மற்றும் M. விஜய் அய்யப்பன் கலை இயக்கம், பூர்த்தி மற்றும் விபின் ஆடை வடிவமைப்பு, பீட்டர் ஹைன் மற்றும் விக்கி சண்டைக் காட்சிகள், அசார் மற்றும் விஜி நடன அமைப்பு, பாடல் வரிகள் கருமாத்தூர் மணிமாறன் மற்றும் கேபர் வாசுகி என பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

நேரடியாக ஓடிடி ரிலீஸ்: இப்படம் அக்டோர் 31ந் தேதி தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், திரையரங்கு வெளியீட்டிற்கு பதிலாக, நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடியில் எந்த தேதியில் வெளியாகும் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தில் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பார்த்து ரசிக்கலாம். மாஸ்க் திரைப்படத்தை தொடர்ந்து கவின், நயன்தாரா இருவரும் இணைந்து நடித்துள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ஹாய். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'ஹாய்'. ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X