Don't Miss!
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- News
50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு அருகே பச்சை வால் நட்சத்திரம்.. கற்காலத்திற்கு பிறகு முதல் முறை!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஷாலின் எனிமி திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா!
சென்னை : அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி.
இருமுகன், நோட்டா உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பக்கா ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் இப்பொழுது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசை ஒரு சூன்யக்காரி என்று சொல்லி ... 1 மில்லியன் பார்வைகளை கடந்த எண்ணித் துணிக டீசர்

அடுத்ததாக வெற்றி
நடிகர் விஷாலின் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்சன் மற்றும் சக்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற மும்முரத்தில் இப்பொழுது இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஆர்யா வில்லன்
இருமுகன் மற்றும் நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் முற்றிலும் வித்தியாசமான ஆக்ஷன் கதைக்களத்தில் இப்பொழுது எனிமி படத்தை இயக்கி முடித்துள்ளார். பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இப்பொழுது எனிமி படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும் ஆர்யா வில்லன் எனவும் கூறப்படுகிறது.

திரில்லர் கலந்த ஆக்ஷன்
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது திரில்லர் கலந்த ஆக்ஷன் திரைப் படமாக இப்படம் உருவாகி இருக்க இதில் கதாநாயகியாக மிருணாளினி மற்றும் மம்தா மோகன்தாஸ் நடித்து உள்ளனர். எஸ்.தமன் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரிலீஸ் பணிகள்
மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ளார். பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து இப்போது ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

நேரடியாக ஓடிடியில்
இந்த நிலையில் எனிமி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என கூறப்படுகிறது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.