நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் நயன்தாரா படம்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனாலேயே ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. தமிழில் அதிகப் படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி மற்ற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில்..

வெற்றிமாறன் இயக்கத்தில்..

தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாப்பாத்திரம் குணச்சித்திர ரோல்கள் என பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் சூரியுடன் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமனிதன் விரைவில் ரிலீஸ்

மாமனிதன் விரைவில் ரிலீஸ்

இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் விரைவில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். ஏற்கனவே நயன்தாராவுடன் விஜய் சேதுபதி இமைக்கா நொடிகள் மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்

தற்போது மூன்றாவது முறையாக நயன்தாராவும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்?

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்?

இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X