காத்துவாக்குல சீக்கிரமா ஓடிடி.,க்கு வந்த காத்துவாக்குல ரெண்டு காதல்...எப்போ தெரியுமா?

சென்னை : விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்து வாக்கு ரெண்டு காதல் படம் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வளவு சீக்கிரம் ஒடிடி.,க்கு வந்து விட்டதே என ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

2022 ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ஒன்று. விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்தன. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி இருந்தது.

ரொமான்டிக் காமெடி படமாக, முக்கோண காதலை மையமாகக் கொண்ட படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எடுக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையமைத்த இந்த படம் ஏப்ரல் 28 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிலர் பாசிடிவ் விமர்சனங்களையும் கொடுத்திருந்தனர்.

Kaathuvakula Rendu Kaadhal to release in Ott on May 20th

ரிலீஸ் செய்யப்பட்ட 22 நாட்களில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் 142 கோடிகளை வசூல் செய்துள்ளது. இருந்தாலும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட வெறும் 22 நாட்களில் ஓடிடியிலும் இந்த படம் வெளியிடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் மே 27 ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளது.

மோசம் என சொல்லும் அளவிற்கு இல்லாமல் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்று, சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கலெக்ஷனும் பார்த்து வரும் படத்தை எதற்காக இவ்வளவு குறுகிய நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்கிறார்கள் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அதே சமயம் இந்த படத்தை தியேட்டரை தொடர்ந்து ஓடிடி.,யிலும் பார்க்க ஆவலாக காத்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தான் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் இருந்து பெற்று தந்துள்ளதாக டைரக்டர் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார். விமர்சனங்களை பற்றி தான் கவலைப்படுவதில்லை என்றும், சீரியசான படங்களுக்கு நடுவில் ஜாலியான, பொழுதுபோக்கான ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த படத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X