Lokah OTT: தீபாவளி ட்ரீட்.. கல்யாணி பிரியதர்ஷனின் மெகா பிளாக்பஸ்டர் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான லோகா திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை. அதே நாளில் வெளியான மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் திரைப்படம் கடந்த வாரமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

லோகா படம் வெளியான ஒரு வாரம் கழித்து வெளியான சிவகார்த்திகேயனின் மதராஸி, காந்தி கண்ணாடி உள்ளிட்ட தமிழ் படங்களும் ஓடிடியில் வெளியாகி விட்டன. லோகா திரைப்படம் நல்லா தானே ஓடுது எதற்கு அவசரமாக ஓடிடியில் வெளியிட வேண்டும், இப்போதைக்கு வெளியிட முடியாது என்றே துல்கர் சல்மான் ஆரம்பத்தில் லோகா ஓடிடி ரிலீஸ் தேதி என வெளியான சில தகவல்கள் தொடர்பாக அதிரடியாக ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.

Kalyani Priyadarshan s Mega Blockbuster Lokah will plan a OTT release on this Diwali
Photo Credit:

இந்நிலையில், தீபாவளி ட்ரீட்டாக லோகா திரைப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோகன்லால், மம்மூட்டி படங்களை வீழ்த்தி: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பலரையும் வீழ்த்தி மெகா இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அதுவும் உமன் சென்ட்ரிக் படமான லோகா மிகப்பெரிய மேஜிக்கை பாக்ஸ் ஆபீஸில் நடத்தி சாதனை புரிந்துள்ளது.

300 கோடி வசூல்: சிவகார்த்திகேயனின் அமரன் படம் 300 கோடி தமிழ் சினிமாவில் வசூல் செய்த நிலையில், மலையாளத்தின் முதல் 300 கோடி கிளப் படமாக லோகா மாறியுள்ளது. மோகன்லால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான எம்புரான் திரைப்படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. அந்த சாதனை எப்போதோ முறியடித்த லோகா இதுவரை ஓடிடியில் வெளியாகாமல் இருக்க காரணமே அது எந்தளவுக்கு வசூல் செய்கிறதோ அது எல்லாமே அடுத்து வரும் மலையாள படங்கள் கடக்க வேண்டிய மைல்கல்லாக மாறிவிடும் என்பதற்காகவே துல்கர் சல்மான் பொறுமை காத்து வந்த நிலையில், 300 கோடி மைல் ஸ்டோனை லோகா கடந்துள்ளது. அடுத்த பாகத்தில் லீடு ரோலில் டொவினோ தாமஸ் நடித்து அசத்த காத்திருக்கிறார். துல்கர் சல்மானும் இந்த சீரிஸில் மிகப்பெரிய கதாபாத்திரத்தில் களமிறங்க உள்ளார்.

லோகா ஓடிடி ரிலீஸ் தேதி: கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக உருவான லோகா திரைப்படம் வரும் அக்டோபர் 20ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளி ட்ரீட்டாக வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இன்னமும் துல்கர் சல்மான் லோகா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக்கு நிச்சயம் தியேட்டர்களில் பல படங்கள் வெளியானாலும், லோகா ஓடிடியில் வெளியானாலும் பலரையும் வீட்டுக்குள்ளே முடக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி மோகனுடன் கல்யாணி பிரியதர்ஷன்: தமிழில் ரவி மோகன் உடன் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ள ஜீனி படம் அடுத்து வெளியாக காத்திருக்கிறது. இன்று இரவு அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ஹீரோ, சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X